பக்கம் எண் :

தமிழ் மொழியின் கலைச் சொல்லாக்கம்21

செய்வாரென்றால், பக்கத்திலிருக்கும் உதவித் துணையாளரைப் பார்த்துப் "படி" என்று சொல்வார். அவன் "Pig" என்று படிப்பான். "Allright, something like that, give five marks" என்று சொல்லுவார். அதற்கப்புறம் என்ன செய்வாராம்? வினாத்தாளில் இன்னொரு இடத்திலே "பசு" என்று எழுதி யிருப்பதற்கு இவன் "Cow" என்றுகூட எழுதத் தெரியாமல், "எருது" என்று ஆங்கிலத்திலே எழுதி வைத்திருப்பான். "Allright just a masculine of that; Give another five marks" என்று சொல்வார். இப்போது இது எப்படி இருக்கிறது? வரால் எவ்வளவு பெரியது? குரவை எவ்வளவு சிறியது? "Something like that". அவ்வளவுதான். வராலைப் போன்றது தானே குரவை. அப்படியே பெண்பனையை ஆண் பனை என்று எழுதியிருக்கிறார்கள்; Just a masculine of it. இதற்கும் அதற்கும் என்ன வேறுபாடிருக்கிறது. இப்படிப்பட்டவர்கள்தாம் இந்த அகர முதலியைத் தொகுத்து வைத்திருக்கிறார்கள்.

மத்தியானம் என்ற சொல் எந்தச் சொல் தெரியுமா? "மத்திய அயம்" என்ற வடசொல். அதற்கு வழங்கிய தமிழ்ச் சொற்கள் எவை எவை தெரியுமா? உருமம், உச்சிவேளை, நண்பகல் என்று மூன்று சொற்கள் ஆகின்றன. திருநெல்வேலியிலே "உருமம்" என்பார்கள். அது வேனிற் காலத்திலே சொல்ல வேண்டும். அதுவும் வெப்ப நேரத் திலே சொல்ல வேண்டும். ஏனென்றால், "உருமம்" என்பது சூடு, வெப்பத் தைக் குறிக்கும். "இந்த உருமத்திலே நீ வந்திருக்கிறாயே" என்று கேட்பார்கள். நண்பகல் என்பது இலக்கிய வழக்கு. இவையெல்லாம் விட்டு விட்டு "மத்தியானம்" அதற்கப்புறம் அதனுடைய சிதைவு மதியம். இது எதற்குச் சமமாக அமைந்து விடுகிறது? பூரண சந்திரனுக்குத் தமிழ்ப் பெயர் "மதியம்". மதி என்றால் சந்திரன். "மதியம்" என்றால் (Full Moon) பூரண சந்திரன். நாலடியாரிலே வருகிறது. "அங்கண் மதியம்"; "அம்" என்பது பெருமைப் பெயர் பின்னொட்டு (Auxilary suffix). நிலை என்றால் Stand நிலையம் என்றால் Station இப்படியே, பெருமைப் பொருள் பின்னொட்டைக் குறிக்க வரும் போது அந்த "அம்" வருகிறது. "கம்பு" என்றால் சிறியது. "கம்பம்" என்றால் பெரியது. "ஸ்தம்பம்" என்று அதை மொழி பெயர்த்திருக்கிறார்கள். இப்படி மொட்டைத் தலைக்கும் முழுங்காலுக்கும் முடி போட்டு வைக்கிறார்கள்.

இப்போது மகிழ்ச்சிக்குரியது என்னவென்றால், இப்போதி ருக்கின்ற இளம்சிறார்கள் உள்ளத்திலே தமிழ் உணர்ச்சியினை எப்படி யோ இறைவன் திரும்பப் படைத்திருக்கிறான். இனிமேல் அடுத்த தலைமுறையிலேதான் அது வளரும். பழைய தலைமுறையிலே பார்ப்ப தாயிருந்தால் இந்த மூன்று அகக்கரணக் கூறுகளும் இல்லவே இல்லை. கல்வியும் அப்படித்தான் காண்கிறது. மாணவன் ஆசிரியனைப் பார்த்து, நான் பிறப்பில் உயர்ந்தவன் என்கிறான். ஆசிரியன் மாணவனிடம் சொல்கிறான். "நீ பிறப்பிலே