பக்கம் எண் :

25

4

தமிழ் வரலாற்று, தமிழ்க்கழக அமைப்பு
மாநாட்டுத் தலைமையுரை

"ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னேரிலாத தமிழ்."

"கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து
பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை
மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணி டைப்படக் கிடந்ததா யெண்ணவும் படுமோ?"

"இருந்தமிழே உன்னால் இருந்தேன்; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்."

அன்பர்களே!

குறித்த காலத்தில் ஒரு நிகழ்ச்சியைத் தொடங்குவது என்பது தமிழர்களிடத்தில் காணுதற்கரிய பழக்கமாகும். ஆனால் ஆங்கிலேயரி டத்தில் காலந்தவறாமை என்னும் இந்தப் பண்பை இயல்பாகவே காண லாம். எதற்காக இதைக் குறிப்பிடுகிறேன் என்றால், எவ்வளவு முயன்றும் கூட இன்று, நிகழ்ச்சி நிரலிற் குறிப்பிட்ட நேரத்துக்குக் கூட்டம் தொடங்க முடியவில்லை. இதனால், எங்கே என் பேச்சைக் காலம்கடந்து தொடங்க வேண்டியநிலை ஏற்படுமோ என்று அஞ்சினேன்.

ஆனால், இம்மாநாட்டில் தொடக்கவுரை நிகழ்த்துதற்கு அழைக்கப் பட்டிருந்த தவத்திரு. குன்றக்குடி அடிகளார் வராததால், என்னுடைய பேச்சைக் குறித்த காலத்திற்கு முன்பே நிகழ்த்த நேர்ந்தது பற்றி மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

நிகழ்ச்சி நிரலின்படி, என்னுடைய பேச்சு 11 மணிக்குத் தொடங்கப் பட்டிருக்கவேண்டும். இப்போது 40 நிமையங்களுக்கு முன்னமே தொடங்குகிறேன். இதுவும் ஒருவகையில் நல்லதே.

தமிழ்மொழி கெட்டதற்குக் காரணமே சமயம்தான். ஏனெனில் சமயத்துறையில்தான் முதன்முதலில் ஆரியர்கள் வடமொழிச் சொற்களைப்