பாண்டிய நாடு என்று சொன்னேனே,
அதற்குச் சான்றாக இன்னும் பல சொற்கள்
வழங்குகின்றன. அங்கும் புகைவண்டி வந்தது; Train
வந்தது, Train என்றோ, இரயில் என்றோ ஒன்றும்
சொல்லவில்லை. புகைவண்டி என்று கூறினார்கள்.
அதற்கப்புறம் Cycle
வந்தது. மிதி வண்டி என்று கூறினார்கள்.
ஆனந்தவிகடன் போன்ற செய்தித்தாள்கள் தாம்
துவிச்சக்கரம் என்று எழுதுகின்றன. ஏனென்றால் Cycle
என்பதை மொழி பெயர்க்கிறார்களாம். By
என்றால் இரண்டு, Cycle
என்றால் சக்கரம். இரண்டு சக்கரங்கள் உடைய
வண்டியை துவிச்சக்கர வண்டி என்று
மொழிபெயர்க்கிறார்கள். மிதிவண்டி என்று
கூறுவதால் என்ன கெட்டுப் போய்விடும்.
ஆகவே, தமிழிலேயே பல கலைச் சொற்களை
உண்டாக்க முடி யும். அவ்வாறு இருக்கப் "பிற
மொழிகளின் உதவியின்றேல் கலைச்சொல் ஆக்க
முடியாது" என்று கூறுவார் கூற்று, பொருளற்றது,
பொருத்தமற்றது என்று கூறி நேரமின்மையால்
இத்துடன் என்னுரையை முடிக்கிறேன்.
1958-ல் பூளைமேட்டில் நடந்த சென்னை மாநிலத்
தமிழாசிரியர்
மாநாட்டின் முழுப்பேச்சு
- "தமிழம்" 1.3.1974
|