|
வடநாடு முழுவதும் திராவிடர்கள் இருந்த
நாடு ஒரு காலத்திலே! இப்போதுதான் அவர்கள் சிதறிக்கிடக்கிறார்கள்
வடநாட்டிலே. உங்கு இங்கு என்ற சொல் தில்லியிலே
வடமேற்குப் பகுதியில் "சாக்" என்ற ஒரு மொழியிலே
வழங்குகிறது. மற்ற இடங்களிலே இதர், உதர் என்கிறார்கள்.
இந்த இடத்திலே இங்கு, உங்கு என்கிறார்கள். ஆகவே
இந்தச் சொற்களெல்லாம், பழைய காலத்திலே அவர்கள்
திராவிடராக இருந்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.
இதற்கு மொழிநூல் சான்று. "திராவிடரின் ஒரு
சாரார்தாம் வடமேற்கில் போய் ஆரியராக மாறிவிட்டனர்.
அந்த ஆரியருள் ஒரு சாரார்தாம் திரும்ப வேத ஆரி
யராக வருகிறார்கள்" இது இராமச்சந்திர தீட்சிதருடைய
நூலிலே தெளிவாக இருக்கின்றது. அதற்கு முன்னாலே பி.
டி. சீனிவாச ஐயங்கார் எழுதிய வரலாற்று நூல்களை யெல்லாம்
நன்றாகப் பாருங்கள். நானும் முப்பதாண்டுகளாகச் செய்துவரும்
ஆராய்ச்சிகளின் முடிவுகளையெல் லாம் ஓர் ஆங்கில
நூலாக ஏற்கெனவே சேலத்தில் எழுதி முடித்தேன். அதை
வெளியிடுவதற்குக் காலம் வரவில்லை; அண்மையிலே
வரும். அப்போது பல உண்மைகளை அறிந்து
கொள்வீர்கள்.
தமிழில் சொற்களை ஆக்குவதற்குப் பல
வகையான வழிகளெல் லாம் இருக்கின்றன. உலக வழக்கிலே
கூட எத்தனையோ சொற்கள் இருக்கின்றன. நான் இதைக்கூடத்
தொகுக்கும்படி சென்னைப் பல் கலைக்கழகத்தாருக்கு
எழுதிக் கேட்டேன். அகரமுதலியில் உள்ள குறை பாடுகளைக்கூட
அச்சிட்டு வழங்கினேன். அதற்கு விடை இதுவரை ஒன்றும்
கிடைக்கவில்லை. மேலும், அதைப்பற்றி ஒரு பேராசிரியரைக்
கேட்டதற்கு அவர் என்னைப் பற்றித் தவறாகக் கூறியிருக்கிறார்.
சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்,
என்னவோ, தனக்குத் தெரியாவிட்டால், பிறருக்கும்
தெரியாது என்று. அது ஒரு வேடிக்கையே. எல்லாவற்றிற்கும்
சொற்கள் இருக்கின்றன. உனக்குத் தெரியாவிட்டால்
பிறருக்குத் தெரியாது என்று நினைத்துக் கொள்ளாதே;
உன்னாலே புதுச்சொல் புனைய முடியாவிட்டால்
பிறருக்குச் சொல்ல முடியாது என்று நினைத்து விடாதே.
முதலாவதாகத் தமிழ் ஆக்க மொழி என்று சொல்லிக்
கொண்டு பல்கலைக்கழகத் தமிழ் அகர முதலியில் டர்.
லக்கிடி என்ற தமிழ் அல்லாத சொற்களையும் சேர்த்து
விட்டிருக்கி றார்கள். 1933-இல் "டர்", வந்து விட்டது.
"டர்" என்றால் அச்சம். இந்தியிலே; வரப்
போகிறது பிற்காலத்திலே என்பதை நமக்கு எச்சரிக்கை
செய்திருக்கிறார்கள்.
நாஞ்சில் நாடு என்ற இடத்திலே, புனல் (Funnel)
என்பதை "வைத்தூற்றி என்று வழங்குகிறார்கள்.
வைத்து ஊற்றுவதினாலே இதற்கு "வைத்தூற்றி"
என்று பெயர். இங்கே யெல்லாம், புனல் புனல் என்றல்
லவா நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
அவர்கள் "வைத்தூற்றி" என்கிறார்கள். நாஞ்சில்
நாடு திருநெல்வேலியை ஒட்டியது. திருநெல் வேலி
செந்தமிழ்ப்
|