இங்குக் காட்டப்பெற்ற சொற்பட்டிகளிலுள்ள
தமிழ்ச் சொற்களின் திருந்திய நிலையும்,
தெலுங்குச் சொற்களின் திரிந்த நிலையும், முன்ன
வற்றின் மூலத் தன்மையைத் தெற்றெனக் காட்டுதல்
காண்க.
இனி, அம்மை, அப்பன், அவ்வை, மகன் முதலிய
முறைப் பெயர்களும், மூவிடப் பதிற்பெயர்களும்; அமர்,
ஆகு, இரு, ஈன், உருள், ஊக்கு, எய், ஏங்கு, கொல், சேர்,
தா, நெருங்கு, போடு, மடி, விழி, முதலிய வினைச்சொற்களும்;
இவைபோல்வன பிறவும்; ஆகிய நூற்றுக்கணக்கான அடிப்படைச்
சொற்கள் திரிந்தும் திரியாதும், ஆரிய
மொழிகளில் வழங்கி வருவதொன்றே, அம்மொழிகள்
தமிழ்ச் சொற்களை முதலாகக் கொண்டு பின்னர்ப்
பெருவளர்ச்சியடைந்தவை என்பதைக் காட்டுவதற்குப்
போதிய சான்றாம்.
(2) தமிழின் இற்றை நிலை
உலகில் முதன் முதற் பட்டாங்கு நூன்முறையிற்
பண்படுத்தப்பட்ட தும், நல்லிசைப் புலவராற் பல்வேறு
துறையில் இலக்கியஞ் செய்யப் பெற்றுப் பல கலையும்
நிரம்பியதும், முத் தமிழ் என வழங்கியதும் ஆன சித்தர்
மொழியாம் செந்தமிழ்; இன்று கலையிழந்தும் நூலிழந்தும்,
சொல்லிழந்தும் இருப்பதுடன், இறவாது எஞ்சியிருக்கின்றனவும்
ஏனை மொழிகளினின்று கொண்ட இரவல் என இழித்தும்
பழித்தும் கூறப்படுவது,
"ஏதிலா ராரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வ முற்றக் கடை"
என்னும் வாய்மொழிக்கிலக்காகிய
இடைக்காலத் தமிழன் மடமையின் விளைவே.
மொழித்துறையில் ஆரியத்தினும் சீரியதென
அரியணையில் வீற்றிருந்த தமிழ், பின்பு வடமொழிக்குச்
சமம் எனக் கொள்ளப்பட்டு, அதன்பின் அதுவுமின்றி
வழிபாட்டிற்கும் சடங்கிற்கும் தகாததெனத் தள்ளப்பட்டதினால்;
முறையே, அது வடமொழியால் வளம்பெற்ற தென்றும்,
வடமொழித் துணையின்றித் தனித்தியங்காததென்றும்,
வடமொழிக் கிளையென்றும், பிற திரவிட மொழிகட்குச்
சமமென்றும், அவற்றினின்று தோன்றியதென்றும்,
கருத்துகள் எழுந்து; இன்று, மக் கட்குப் பெயரிடுதற்கும்,
உயர்ந்தோரொடு பேசுதற்கும், அச்சுப் பிழை திருத்தற்கும்,
அலுவலகங்களில் வினவி விடை பெறுதற்கும், ஏற்காத தாழ்த்தப்பட்ட
மொழியாகத் தமிழ் வழங்கி வருகின்றது. இதனால்,
அது புலவர் வாயிலும், கலப்பு மொழியாகவும் கலவை
மொழியாகவும், கொடுமொழியாகவும், கொச்சை
மொழியாகவும் இருந்துவருகின்றது. இதுபற்றி, அது இறந்த
மொழியென்றும், இற்றைக் கேலா மொழி யென்றும்,
எதிரிகள் கொக்கரித்துக் கூவுகின்றனர்.
சென்னைப் பல்கலைக் கழகத்
தமிழகராதி
தமிழைச் செவ்வை யாய்க் காட்டுதற்குத் தகாத
மொழியெனக்கொண்டது; கலைக் களஞ்சியம் அது
|