பக்கம் எண் :

40பாவாணர் உரைகள்

5

பாவாணர் சொற்பொழிவு

தமிழன்பர்களே!

இக்கூட்டத்திற்குப் பேராசிரியர் நிலவழகனார் சொக்கப்பனார் இருவரும் வரவியலாதென்று முன்னரே மடல் எழுதிவிட்டனர். அப் பெயர்களில் சொக்கப்பனார் என்பதைச் "சொக்கப்பா" என்று சொல்லக் கூடாது. தமிழ்மொழியில் ஆகார ஈற்றுப் பெயர்கள் இருக்கக்கூடாது. கன்னட மொழியில்தான் அவ்வழக்குண்டு. அதனால்தான் "தங்கப்பா" என்பதையும் "தங்கப்பனார்" என்று அழைத்தேன். "அண்ணாத்துரை" என்னும் பெயரும் பிழையானது. முறைப்படி அது "துரை அண்ணன்" என்றிருக்க வேண்டும்.

மேனாட்டாருள் கால்டுவெல், தமிழின் சுட்டுச் சொற்களின் சிறப் பையும் ஓரியன்மையையும் குறித்துள்ளார். ஆனால் எண் வேற்றுமையில் சமற்கிருதத்தைப் பின்பற்றியுள்ளார். இன்று மேனாட்டார் உண்மையை உணர்ந்து வருகின்றனர். பேராசிரியர்கள் பரோவும் எமனோவும் மேனாட் டாருள் தமிழின் தொன்மையை உணர்ந்தவர்கள். மேனாட்டாருக்கு மெய்க்கருத்தை விளங்கச் செய்வதற்காக "A Guide to western Tamilologists" என்னும் ஆங்கில நூல் எழுதப் போகின்றேன். பாரிசில் நடக்கவிருக்கும் மூன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு முன்னர் அது வெளிநாட்டு அறிஞர்களின் கைகளில் இருக்கும்.

மாந்தன் தோன்றிய இடம் மெசபத்தோமியாவா அல்லது குமரிக் கண்டமா என்ற ஐயம் உலக அறிஞர்களிடையே நிலவுகிறது. மெசபத் தோமியாவில்தான் தோன்றினான் என்று மதச்சார்பில் ஊன்றியவர்கள் நம்புகின்றார்கள். மதச்சார்பிருந்தால் ஆராய்ச்சியானது ஒருதலையாகிப் போகும். எனவே மதச்சார்பின்றி நடுநிலையோடு ஆராய வேண்டும்.

மதுரை, திருநெல்வேலி, கரந்தை, கோவைத் தமிழ்ச் "சங்கங்கள்" பல் குழுக்களாக இயங்கிக் கேடு செய்கின்றன. பழங்காலத்தில் பாண்டி யன் தலைமை ஏற்றுத் தமிழ்க்கழகங்களை நடத்தி வந்தான்.

இன்று அச்சிட முடிந்தவர்கள் அச்சிடுகின்றார்கள்; கழகம் தொடங்கி விடுகின்றார்கள்.

சங்கம் என்பது வடசொல்;

கழகம் என்பதே தமிழ்ச் சொல்.