1933-ல் தமிழர் மாநாட்டு
அழைப்பையும் அதற்கு மறைமலை யடிகளின் விடையையும் "சூன்" மாதச்
"செந்தமிழ்ச்செல்வி"யில் வெளி
யிட்டிருக்கின்றார்கள்; படித்துப் பாருங்கள்.
"திங்கள்" "மாதம்" என்ற இரு
சொற்களும் தமிழ்ச் சொற்களே! ஆரிய, பின்னிய
மொழிகளிலுள்ள KOT
- கோடி என்பதும் தமிழ்ச் சொல்லே!
யாழ்ப்பாணம் ஞானப்பிரகாசர்
இப்போதிருந்தால் பெருந்துணை யாவார். மதி (நிலவு)
என்ற சொல் வடமொழியில் இல்லை.
மதி - மாதம்
ஒருசொல் ஒரு பொருளே குறிக்க வேண்டும்.
பொருள் வேறுபாட்டை ஈறுகாட்டவேண்டும்.
எ-கா :
மண் - மணல்
கம்பு - கம்பி
"சந்திரன்" என்ற சொல்லுக்கும் வேர்
தமிழே!
சில சொற்கள் சொல்லளவில்
தமிழாயிருக்கும். சிலசொற்கள் வேரளவில்
தமிழாயிருக்கும்.
மாஸ - (வடமொழி வடிவம்)
மாஸ் - (இந்தி)
"திங்கள்" என்னும் சொல் நிலவைக்
குறிப்பது. எனவே சொல் வேறுபாட்டிற்காக "மாதம்"
என்ற சொல்லை வழங்கலாம். சனசங்கக் கட்சியின்
விளக்கணி விழா (தீபாவளி) மலரிலே ஒரு செய்தி
வெளியிட்டிருந்தார்கள்
தீப + ஆவளி = தீபாவளி
ஆவளி - வரிசை
அண்ணாத்துரை, தண்ணீர் கொண்டுவா
என்னும் சொற்கள் எல்லாம் வடசொற்கள் என்று
எழுதியுள்ளார்கள். பாணினீய நூற்பா வையும்
எடுத்துக்காட்டியுள்ளார்கள். அவர்களுக்குச்
சென்னைப் பல்கலைக் கழக அகரமுதலியும்
துணைசெய்கிறது. மேலைநாடுகளில்
தகுதியுள்ளவர்களுக்கே பல்கலைக்கழக வேலை
கிடைக்கும். இங்கு அவர்க்கே கிடைக்காது. நம்முடைய
முதல் வேலை அகரமுதலித் திருத்தம்தான்.
"பாண்ட்ய" என்னும் சொல்லிலிருந்து
"பாண்டியன்" வந்ததாக அதில் குறித்துள்ளார்கள்.
குமரன் - குமரி
இளைஞன் - இளைஞி, என்பன தமிழ்வழக்கு.
இச்சொற்களை நீட்டிக் காட்டியுள்ளார்கள்.
|