செல்வன், செல்வி ஆகிய சொற்கள்
மணமக்களைக் குறிக்கவே பயன்படும்.
"mister"
என்பதற்குத் "திருவாளர்" என்றும் "miss"
என்பதற்குக் "குமரி" என்றும் தமிழ்ச்சொற்களை
ஆளவேண்டும்.
திருமதி - ஓர் இருபிறப்பி
இதில் மதி - வடசொல்.
பெருமான், திருமான் - இவற்றில் "மான்"
என்பது "மகன்" என்ற சொல்லின் திரிபு. அது
வடமொழியில் "மத்" என்றாகும்.
திருமான் - ஸ்ரீமான் - ஸ்ரீமத் - ஸ்ரீமதி
"திருமதி" என்ற சொல்லை வெளியிட்டு
நெடுஞ்செழியன் கெடுத்து விட்டார்.
ஆராய்ச்சியில்லாத தலைவர்களைப் பின்பற்றிக்
கட்சியாளர் களும் பயன்படுத்தி வருகின்றனர்.
குழைந்தது - கூழ் என்பது சரி.
இதைக் "கூர" (வ) என்பதிலிருந்து
வந்ததாகச் சென்னைப் பல்கலைக் கழக
அகரமுதலியில் குறித்துள்ளனர்.
குழவு - குழந்தை என்பது முறை.
இதைக் குடந்தையிலிருந்து குழந்தை
வந்ததாக அவ்வகர முதலியில் குறித்துள்ளார்கள்.
பஞ்சு - பருத்தியிலிருந்து எடுப்பது.
Calico - Calicut,
கோழிக்கோட்டையிலிருந்து ஏற்றுமதியானது.
கோழிக்கோடு என்னும் பெயரையே ஆங்கில
வழக்குப்படி கள்ளிக் கோட்டை என்று மாற்றி
வைத்துக்கொண்டார்கள். "பஞ்சு" என்னும் சொல்
சமற்கிருதத்திலிருந்து வந்ததாக அகரமுதலியில்
குறிக்கப் பட்டுள்ளது.
"பெட்டி" என்னும் சொல்
"பேட்டி"யிலிருந்து வந்ததாகவும்
குறிப்பிட்டுள்ளார்கள்.
மூவேந்தரும் அக் காலத்தில் பிராமணன்
காலில் விழுந்து வணங்கியிருக்கின்றார்கள்.
உடலை அயலான் பிணைப்பது வழக்கம்.
ஆனால் உள்ளத்தையும் ஆரியன்
பிணைத்தான்.
தமிழை மீட்பது போராட்டத்தால்தான்
முடியும். எழுதிப் பயனில்லை. திங்களை நாய்
குரைத்தாற் போலிருக்கிறது.
தமிழன் ஆரியனுக்குத்
தாழ்ந்தவனல்லன் என்னும் உண்மையை உலகறியச்
செய்ய வேண்டும்.
|