தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு என்னும்
பெயரைப் புதுக்கியதால் இந்தி போய்விட்டதாகாது.
கி.மு. 50000 முதலே "தமிழ் நாடு" என்ற பெயர் இருந்து
வந்துள்ளது. "தமிழ்நாடு" மக்கள் வாயில் வழங்கிய
சொல்லே!
நீலகண்ட சாத்திரியாரின் நூல்
இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது. எந்தப்
பேரியக்கமும் முதலில் சிறுஅளவில்தான்
தொடங்கப்பட்டுள்ளது. இயேசுவிற்கும் 12
பின்பற்றிகளே இருந்தனர். இன்று எவ்வளவோ
வளர்ந்த மதமாகிவிட்டது.
துர - Drive
துருவு - Through
Trans (Latin)
- Transport.
தமிழ்ச்சொல் ஆங்கிலத்திற்கு
வேர்ச்சொல்லாயிருப்பதைக் காண்க.
ஆங்கிலத்தில் உள்ள சுட்டுச்சொற்களான "This,
That" என்பன, தமிழ்ச்
சுட்டெழுத்துகளினின்று தோன்றியவையே!
வடமொழியிலும் காலம், உலகம் முதலிய
தமிழ் அடிப்படைச் சொற்கள் எடுத்துக்
கொள்ளப்பட்டுள்ளன.
வடமொழியைத் தேவமொழி என்பது
ஏமாற்றுவேலை. மறைப் பதற்குச் சொல்லப்படுவது.
பொருந்தப் புளுகு, பொருந்தாப் புளுகு இரண்டுள் இது
பின்வகையது.
ஆப்பிரிக்காவில் சென்ற
நூற்றாண்டில் மாந்தனை அடித்துத் தின்றவர்கள்
இருந்திருக்கின்றார்கள். அவர்களே வெள்ளையரை
வெளியேற்றும் அளவிற்கு முன்னேறினார்கள்.
கீ. இராமலிங்கனார்,
சங்கராச்சாரியாரைப் பார்க்கச் சென்றபோது
தமிழை "நீசபாசை" என்று அவருடைய அணுக்கத் துணைவர்
கூறி யிருக்கிறார். அதற்கு மறுப்புத் தெரிவிக்க
அவர்க்குத் துணிவில்லை.
பஞ்சாங்கம் - ஐந்திறம். அதில்
எழுகோள்களையும் வைத்து ஏழு நாள்களைப்
பெயரிட்டார்கள். சனி, புதன் இரு சொற்களும் வட
சொற்களாக இருப்பதை வைத்துக் கால்டுவெல்
தமிழர்க்கு ஐந்து கோள் களைத்தாம் தெரியும்
என்று கூறிவிட்டார். அது பெருங்கேடாகிவிட்டது.
அது தூங்கினவன் கன்று சேங்கன்று
என்றாகிவிட்டது. உலகத்தார் பிற்போக்காக
இருந்தபோது நம்முன்னோர் மதங்களும் பொறிகளும்
அமைத்து முன்னேறியிருந்தனர். திரவிடம்
பத்தொன்பது மொழிகளைக் கொண்டது. 1856-ல்
சோசப்பு என்பார் ஆங்கிலமொழியில் 35000
சொற்கள் இருந்ததாக அறுதியிட்டார். அவற்றுள்
ஆங்கிலத்திற்கு மூல மான ஆங்கிலோ சாக்சன் (Anglo-Saxon)
சொற்கள் 23000 இருந்தன.
|