பின்னர் மாக்சு முல்லர் (max
muller) 75000 சொற்கள் இருப்பதாக
அறிவித்தார். அச் சொற்களில்
100 க்கு 80 - கிரேக்க, இலத்தீன்
சொற்களும்
100 க்கு 10 - ஆங்கிலோ சாக்சன்
சொற்களும்
100 க்கு 10
- தமிழும், வேற்று உலகமொழிச் சொற்களும் உள்ளன.
ஆங்கிலம் கடன்கொண்டதால்தான்
வளர்ந்தது என்று சொல்வது தவறு.
அறிவியலினால்தான் அம்மொழி வளர்ந்தது. அது
உலகப் பொது மொழியாக மட்டுமில்லாமல் அறிவியல்
மொழியாகவுமுள்ளது.
நாம் ஆங்கிலத்தை அடியோடு
விட்டுவிடக் கூடாது. ஆனால், ஆங்கிலத்தால்
தமிழ்ப்பற்றுக் குறையவும் கூடாது.
எண்ணத்திற்கு (Thinking)
மொழி இன்றியமையாதது. ஊமைத் துரை ஓர்
எடுத்துக்காட்டாளர். பறவையும் விலங்கும்கூட எண்ணு
கின்றன.
கம்பனின் மகனாக இருந்தாலும்
மொழிவழங்காவிடத்திலிருந்தால் பேசான்.
சட்டைக்காரன் வீட்டில் வளர்ந்தால்
தமிழப் பிள்ளையும் கலகல வென ஆங்கிலம் பேசும்.
நமக்கு இருமொழித் திறமும் வேண்டும்.
ஆங்கிலத்தில் வெறுப்புக் கூடாது.
தமிழென்றால் தமிழாகவே இருக்க
வேண்டும்.
அவலை நினைத்து உரலை இடிக்கக் கூடாது.
Divorce என்னும் ஆங்கிலச்
சொல்லுக்கு "விவாகரத்து" என்று பிராமண ஏடுகள்
எழுதுகின்றன. "மணமுறிவு" என்று சில ஏடுகள்
எழுதுகின்றன. இரண்டும் பிழையானவை. "மணமுறிப்பு"
என்று எழுத வேண்டும். இன்னும் நடைமுறையில் சில
நல்ல சொற்கள் உள்ளன. அவை மணத் தீர்வை,
தீர்த்துக் கட்டுதல் என்பன.
பக்தவத்சலம் ஏற்படுத்திய
சட்டச்சொற்கள் தொகுப்புக் குழுவின் தலைவர்
அனந்த நாராயணனுக்கு இச்சொற்கள் வாரா. அவர்
தெய்வ(!)ப் பிறப்பாளர்.
ஆள் ஒன்றுக்குப், பேர் ஒன்றுக்குப்,
புள்ளி ஒன்றுக்குத், தலை ஒன்றுக்கு என்னும்
வழக்குகள் நாட்டில் இருக்கின்றன. அவரோ "நபர்
ஒன்றுக்கு" என்னும் சொல்லை விரும்புவதாகக்
கூறியுள்ளார்.
"motor"
என்னும் சொல்லைத் தமிழில் "இயங்கி" என்று
வழங்க வேண்டும். இராமலிங்கனார் தன்பெயர்
நிலைபெற வேண்டுமென்று "உந்து" என்னும் சொல்லைக்
கொண்டு வந்தார்.
விண்ணப்பம் (வ) - வேண்டுகோள் (தமிழ்)
|