பக்கம் எண் :

மொழித்துறையில் தமிழின் நிலை5

கட்டைகளைத் திருத்தல் வேண்டும். கல்வியறிவில்லாத கண்ணிலிகட்குக் கற்பித்தல் வேண்டும்.

பெரும் பதவிகளிலிருந்து பெருஞ் சம்பளம்பெறும் பேராசிரிய ரெல்லாம் பேரறிஞரல்லர். உண்மையுரைக்கும் ஆராய்ச்சியாளர்க்கு இன்றியமையாத இயல்பு அஞ்சாமை. அஃதுள்ளாரைத் திராவிடர் கழகத்தாரென்றும், மொழி (தமிழ்) வெறியரென்றும் நெறிதிறம்பிய ஆராய்ச்சியாளரென்றும், பிராமணப் பகைவரென்றும் வடமொழி வெறுப்பாளரென்றும், கூறுவது பேணத்தக்கதன்று. தமிழன் பரந்த நோக்குள்ளவன். தமிழைப் பேணுவார் அனைவருந் தமிழரே.

தமிழ்நாட்டில் தமிழ் வாழ்க. தமிழ்த் தொண்டர்படை திரள்க.

கரந்தைப் புலவர் கல்லூரி 1955-56ஆம் ஆண்டு விழாத்
தலைமைப் பேருரைச் சுருக்கம்
- தமிழ்ப்பொழில்