முதலாவது, பிரமசரியம், கிருகத்தம், வானப்பிரத்தம்,
சந்நியாசம் என்னும் நால்வகைப் பிராமணிய
வாழ்க்கைநிலையைத் தமிழர் ஒப்புக்
கொள்ளவில்லை. ஆதலால், வள்ளுவரும் அதை ஒப்புக்கொண்டிலர்.
தமிழர் வகுத்த வாழ்க்கைநிலையெல்லாம், இல்லறம்
துறவறம் என இரண்டே. இல்லறத்தை மேற்கொள்வானின்
மாணவநிலை இல்லறத்தின் பாற்படுவதே. துறவறத்தை
விரும்புவானின் மாணவநிலையும், உண்மை யின்மை (கூடாவொழுக்கம்),
உறுதியின்மை (தொடராமை), ஆகிய காரணங்களால் துறவறத்தின்பாற்
பட்டுவிடாது. மனைவியொடு கூடி வாழும் வாழ்க்கை
ஒருபோதும் துறவாகாது. இன்ப நுகர்ச்சியாற்ற லழிந்தபின்,
இன்பத்தை வெறுத்ததாக நடிப்பது, பார்வை யிழந்தபின்
படக்காட்சி பாராமையொத்ததே. ஆதலால், உண்மையான
அறநிலை தமிழர் கண்டவையே.
இரண்டாவது, "இயல்பு" என்பது அதிகாரத்தான்
இல்வாழும் இயல்பைக் குறிக்குமேயன்றிப் பொதுவாக
அறத்தை உணர்த்தாது. இங்குள்ள அதிகாரம் "இல்வாழ்க்கை"
என்பது, பொதுவான அறம் "அறன் வலியுறுத்தல்"
என்னும் அதிகாரத்திற்குரியதாம்.
மூன்றாவது,
"துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும்
இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை"
(குறள் .42)
என்னும் அடுத்த குறளில், துறவியரைக்
குறிக்கின்றார் வள்ளுவர். முந்தின குறளில், "இயல்புடைய
மூவர்" என்று குறிக்கப்பட்டவருள் துறவியரையும்
பரிமேலழகர் அடக்கிவிட்டதனால், இங்கு, "களைகணா
னவராற் றுறக்கப் பட்டார்" என்று "துறந்தார்"
என்னும் சொற்குப் பொருந்தாப் பொருள் கூற வேண்டியதாயிற்று.
துவ்வாதவருள் களை கணானவரால் துறக்கப்பட்டாரும்
அடங்குவர். துறந்தார் என்னும் வினையாலணையும்பெயர்
செய்வினை வாய்பாட்டிலிருப்பதால், அதற்குத் துறவியர்
(உலகப்பற்றைத் துறந்தவர்) என்று நேர்பொருள்
கொள்வதே நேரிதாம்.
நான்காவது, முற்றத் துறந்த யோக
வொழுக்கத்தானை இல் வாழ்க்கை யதிகாரத்தின் முதற்குறளிலேயே
குறிக்கத் தேவையில்லை. வள்ளுவர் இல்லறத்தாரை முதற்குறளிற்
குறித்துவிட்டுத் துறவறத்தாரை இரண்டாங் குறளிற்
குறித்தார் எனவே பொருத்தமாம். இல்லறத்தாருள்
ளேயே ஒரு வகுப்பார் ஏனை மூவகுப்பார்க்குத் துணை என்பதை
எடுத்துக் காட்டுவதே ஆசிரியர் நோக்கமாம். துறவியர்
ஒருதொழிலுஞ் செய் யாமையின், அவர்க்கு இல்வாழ்வான்
துணை என்பது வியக்கத் தக்க செய்தியன்று.
அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும்
நாற்பாற் குடிக ளுள், வேளாளரையே இல்லறத்தாருட் சிறந்தவராக
எடுத்துக்கொண்டார் திருவள்ளுவர். அந்தணர், முனிவரான
துறவறத்தாரும் புலவரான
|