பக்கம் எண் :

80பாவாணர் உரைகள்

நீக்கிடவில்லை, நிறுத்தியிருக்கிறார்கள். அதை நாம் கவனிக்க வேண்டும். நிறுத்தி வைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள், நீக்க வேண்டும் என்று சொல்லவில்லை.

இதை நன்றாக எண்ணிப் பார்த்தால் அவர்கள் அந்த ஆட்சிக் கலையில் எவ்வளவு தேர்ச்சி பெற்றவர்கள் என்பது தெரிகிறது. அதனாலே தமிழவேள் பட்டம் கொடுக்கப்பட்டது தமிழவேள் என்ற பட்டமானது அவர்களுக்கு இந்த நாட்டு தமிழ்ப் பேராசிரியர்கள் கூட்டிய குழுவிலே கொடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழவேள் பட்டம் தகுதியானது!

இவர்களால் படித்துத் தீர்க்கப்படாத தமிழ் நாட்டுப் பகுதியோ தமிழ் வகுப்போ இருப்பதாகத் தெரிவில்லை. ஆகையினாலே தமிழவேள் என்ற பட்டம் அவர்களுக்கு மிகுந்த தகுதிதான்.

தமிழவேள் என்றால் தமிழை மட்டுமன்று; தமிழரையும் அவர்கள் விரும்புவது மட்டுமல்ல, அவர்களாலே அவர் விரும்பப்படுகின்றவர் என்பதுதான். ஏற்கனவே உமா மகேசுவரம் பிள்ளைக்குக் கொடுக்கப் பட்டது. ஆனால் அதைவிட இது மிக மிக விரிவான முறையிலே மிகத் தகுந்த முறையிலே கொடுக்கப்பட்டிருக்கிறது.

பண்டைக் காலத்திலேயும் அரசர்களும் பல அமைச்சர்களைப் பட்டங்களாலும் புகழ்ந்தார்கள். அதிமர்த்தனபாண்டியன் என்கிற அரசன் திருவிளையாடல் புராணத்திலே மாணிக்கவாசகருக்குத் தென்ன வன் பிரம்மராயன் என்ற பட்டம் கொடுத்தார். இரண்டாம் குலோத் துங்கன் சேக்கிழாருக்கு உத்தம சோழப் பல்லவன் என்ற பட்டம் கொடுத்தார். அதைப் போன்றுதான் இப்பொழுது இவர்களுக்குப் பட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே எனக்கு முன்னாலே புலவர்கள் பேராசிரியர்கள் சொன்னபடி அவர்கள் என்றும் நீடுழி தமிழவேளாக இருந்து இந்த தமிழ் நாட்டைக் காத்து வருவார்கள்.

- முதன்மொழி