அசைகளாகவும் சொற்களாகவும்
சொற்றொடர்களாகவும் பல ஆயிர இலக்கக் கணக்கான
ஆண்டுகள் வளர்ச்சியடைந்த மொழிகள் இப்போது
ஒரே முறையாக அவன் பேசுகிறான், இப்பொழுதைய
சொற்பயிற்சி முறையிலிருந்து. இப்பொழுது ஓர்
ஆசிரியப்பயிற்சிக் கல்லூரி இருக்கிறது-அதிலே
சில கற்பிக்கும் முறைகள் சொல்லப்படுகின்றன.
அவை யெல்லாம் ஒருவராலேயே ஒரே காலத்தில்
கண்டுபிடிக்கப் பட்டவை யல்ல. பல காலத்திலே பலர்
கண்டுபிடித்த முறைகளையெல்லாம் இப் பொழுது ஒருங்கே
ஒருவர் கற்றுக்கொள்கின்றார். அது போலவேதான்
இந்த மொழியானதும் கற்றுக் கொள்ளப்படுகிறது.
சமற்கிருதத்தைப் பற்றிப் பின்னாலே
சொல்லுவேன், அது எப்படிப்பட்ட மொழியென்று.
குமரிநாடு மிகப்பழமையானது.
இதைப்பற்றி மேனாட்டாரும் தெளிவாக
எழுதியிருக்கிறார்கள். அதிலே கிளேற்றர்
என்பவர் (Sclater)
ஆங்கிலேயர், அந்த இலெமூரியாக் கண்டத்தை -
இலெமூர் என்கிற தென் கண்டத்தை ஆய்ந்து அதற்கு
அந்தப் பெயரிட்டார். "இலெமூர்" என்றால்
"மரநாய்" என்று பொருள் அவ்வளவுதான். ஒருவகை
மரநாய். அந்தக் குரங்கிற்கு முந்தின பிறப்பு அது.
அங்கு இலெமூர் என்ற மரநாய் மிகுந்திருந்ததினாலே
அதற்கு இலெமூரியா என்று பெயர்
கொடுத்திருக்கிறார். நாம் இதைக் குமரியா என்று
மாற்றிக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான். இந்தக்
குமரி நாட்டிலே மாந்தன் தோன்றி னான். இப்பொழுது
முதலாவது தமிழ் முதன்மொழி என்பதற்குப் பல
சொற்களே போதுமானவையாக இருக்கின்றன. இரண்டே
இரண்டை மட்டும் சொல்லி முடித்துவிடுகின்றேன்.
இப்பொழுது மகன் என்ற சொல்லானது
பெரும்பாலும் புதல்வன் அல்லது SON
என்ற பொருளிலே வழங்கினாலும்
(முன்) - மன் - மான் (Man)
- மனிதன் என்ற பொருளிலும் வழங்கப்பட்டிருக்கிறது.
அது பழைய காலத்திலே ஆளப்பட்டது.
இப்பொழுது ஓர் ஆட வனும் ஒரு பெண்ணும் வந்தார்கள்
என்று சொல்வதைப் பழங் காலத் திலே ஒரு மகனும் ஒரு
மகளும் வந்தார்கள் என்று சொல்லிவந்தார்கள்.
அதில் இந்த மகன் என்ற சொல்லானது
பிற்காலத்திலே மான் - மன் - என்று
திரிந்திருக்கிறது.
பெருமகன் என்பது பெருமான் என்று
திரியும்.
பெருமான் என்பது பெருமன் என்று குறுகும்.
சொல் பெரும, காண் பெரும என்று ஒருவரை
விளிக்கும்பொழுது அது பெருமன் என்று இருந்தால்தான்
அந்த விளி ஏற்கும்.
பெருமான் என்று இருந்தால் பெருமானே
என்று விளிக்க வேண்டும். அந்த "மன்" என்ற
சொல்லிருக்கின்றதே. அது ஆங்கிலத் திலே man
|