or Creations) என்று ஒரு
பொத்தகம் எழுதியிருக்கிறார். அதன் இறுதியிலே
"ரிசென்சேசன்" (Recentation)
என்று ஒரு பகுதி இருக்கிறது. அது என்னவென்றால்
"கொள்கையை மீட்டுக்கொள்ளுதல், தன்
கொள்கையைத் தானே மறுதலித்தல்". என்பதாம்.
"இளமையிலேயே பேரூக்கத்தினாலே ஒரு கொள்கையைப்
பரப்பினேன். மற்றவர்கள் அதைக்
குருட்டுத்தனமாகப் பரப்பித் துரும்பைத் தூணாக்கி,
ஈரைப் பேனாக்கிப் பேனைப் பெருமாளாக்கி
உலகத்திலே எல்லாம் பெரிய மயக்கத்தை
உண்டுபண்ணி விட்டார்கள்", என்று மிக
வருத்தத்தோடு சொல்லியிருக்கிறார். அதற்கு
மதிப்புரை வழங்கியவர் "நெசுபீல்டு" (J.C.
Nesfield) என்று கருதுகின்றேன். அவர்
இங்கிலாந்திலேயே ஒரு பெரிய மருத்துவ அதிகாரி.
அவர் அதற்கு மதிப்புரை தந்திருக்கிறார்.
எனக்கும் அந்தக் கொள்கைதான். மாந்தனை
அடுத்துச் சில குரங்குகள் இருந்தன. அவ்வளவுதான்.
ஆந்தரோபாய்டு (Anthropoids)
மாந்தற் போலிகள் என்ற திட்டத்தில் சில
குரங்குகள் இருந் திருக்கின்றன. அவ்வளவுதான்! பல
குரங்குகளைப் பல இடங்களிலே கண்டுபிடித்ததாகச்
சொல்கிறார்கள்! எங்குத் தாடை எலும்பு ஒன்று
கிடைத்தாலும் மண்டை ஓட்டு உச்சி கிடைத்தாலும்,
ஒரு பல் கிடைத்தாலும் அதை வைத்துக் கொண்டு
எவ்வளவோ பெரிய மலையைக் கட்டி
வைத்திருக்கிறார்கள்! இதிலே அந்தக்
குரங்கினத்தி லிருந்தே மக்கள் முதல் மாந்தன்
வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். இப்போது பல
வகையான குரங்குவகை சேர்ந்ததி னாலே.
ஆர்தர்லோதேசார் (Artherlopithesar)
ஆர்தரோபிதர்சாந்தரபோல் (Arthopithersanthropol)
என்கிற தென்பால் குரங்குமாந்தன், அதற்கப்புறம்
பிதகேந்தரபசு எரக்டசு என்கிற (Pithecanth
ropus Erectus) நிமிர்மாந்தன். அதன்
பிறகுதான் மற்ற மாந்தர்களெல்லாம். உகோமா
எரக்டசு (Homo Erectus, Capiens)
உகோமா சேபியன்சு என்றது கடைசியாக மதி மாந்தன்
என அவர்கள் கருதினது.
தமிழ் மறுக்கப்பட்டிருப்பதினாலே,
மேனாட்டார் தமிழ் அறியாத தினாலே
ஐரோப்பியர்கள் தங்களை அடிப்படையாக
வைத்துக்கொண்டு, அவர்களே தங்களை முதல் மாந்தன்
என்று கருதிக்கொண்டிருக்கி றார்கள், கடைசியிலே
உகோமா சேப்பியன் (Homosapien)
என்று வருகிறது. மதி மாந்தன் - அந்த
மதிமாந்தன்தான் தமிழன். அவன்
காலத்திலிருந்துதான் இந்த மாந்தன் வரலாறு
தோன்றுகிறது. குரங்கிற்கும் இவனுக்கும் யாதொரு
தொடர்புமில்லை. மாந்தன் அங்கே தோன்றி னான்.
முதற்காலத்திலே பேச்சில்லாமல் இருந்தது.
அவ்வளவுதான்.
இப்பொழுது குழந்தை இருக்கிறது, அந்தக்
குழந்தையை நீங்கள் மக்கள் உறவில்லாதபடி
தனியிடத்தில் பிரித்துவைத்து வாழச்செய்தீர்க
ளானால் ஒரு மொழியும் பேசாது. அதைத் துணிந்து
செய்வதாயிருந்தால் செய்து பாருங்கள்.
(மென்னகையுடன்). ஒரு மொழியும் பேசாது. சில சில
|