பக்கம் எண் :

84பாவாணர் உரைகள்

11

பாவாணர் இறுதிப் பேருரை

யாம் இங்குக் கூறும் கருத்துகளை ஆய்வுள்ளார் ஆய்ந்தறிந்து கொள்க. நான் துரையண்ணன் என்று சொல்ல விரும்பும் அண்ணாதுரை இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் எனக்கு இடம் தந்தாலும் அதிலே எனக்கொரு வரம்பிடப்பட்டிருந்தது. கட்டுரை எழுதுவார் கவனிக்க வேண்டிய நெறிமுறைகளில் ஒன்று. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்றது போலத் தமது உயர்கொள்கையைத்தான் தழுவல் வேண்டும். "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தக்குடி" என்று உயர்வு நவிற்சியும் தற்புகழ்ச்சியும் கருதி உண்மைக்கும் அறிவியலுக்கும் மாறான, உலக அறிஞர்கள் ஒப்புக்கொள்ளாக் கொள்கைகளை யெல்லாம் விட்டுவிட வேண்டும் என்றிருந்தது. நான் பேருக்கு மட்டும், - துரை யண்ணணாரின் - கட்டளைக் கிணங்கி ஒரு கட்டுரை எழுதி விடுத்து விட்டு நான் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் இந்த மாநாட் டிலே எனக்கு ஒரு தக்க இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு நமது புரட்சி நடிகர், மறைந்த குமரிக் கண்டத்தையே புரட்டி நமக்கு ஒரு படம்வழிக் காட்டுகின்றவர், இராமச்சந்திரன் என்னும் அழகமதியா ருடைய ஆட்சியிலே இந்த நிலைமை வாய்த்ததற்காக நான் இறைவனை மிகவும் வழுத்துகின்றேன்.

இப்பொழுது பேசப்படும் பொருள் மிக விரிவானது. "மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்" என்பதாகும். பழங் காலத்திலெல்லாம் பொதுவாகக் கடவுள் எல்லாவற்றையும் - உலகத்தைப் படைத்தபோது மற்ற உயிரினங்களையும் படைத்தார் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் சென்ற நூற்றாண்டு நடுவிலே சார்லசு தார்வின் தோன்றியபின்பு ஒரு திரிவாக்கக் கொள்கையினாலே இந்த உயிரினங்களெல்லாம் தோன்றி வளர்ந்து வருகின்றன என்ற கொள்கை பரவிவருகின்றது. நான் அந்த "Evolution" என்பதைத் "திரிவாக்கம்" என்று சொல்ல விரும்புகின்றேன். ஒன்று திரிந்து இன்னொன்றாவது என்று பொருள். ஆனால் இது பல்துறை அறிவியலாளர் இந்தக் கொள்கையை மிகக் கடைப்பிடித்து வந்தாலும் இது சில அறிஞர்களாலே ஒப்புக்கொள்ளப்படவில்லை. சென்னைப் பல்கலைக்கழக மாநிலக் கல்லூரியிலே விலங்குநூற் பேராசிரி யராய் இருந்து ஓய்வுபெற்ற "ஏனக்கு" (Enoch) என்பவர் "திரிவாக்கம் அல்லது உருவாக்கம்" (Evolution