பக்கம் எண் :

கலைஞர் நூல் வெளியீட்டு விழா83

பாவரங்கேறினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இவர்களுடைய பாடல்கள் எல்லாம் சிறந்த ஆராய்ச்சி முறையிலே தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டன. இப் பொழுது அடுத்தபடியாக உரைநடை. பண்டைக் காலத்திலே நம்முடைய புலவர்கள் வழக்கிலே, எல்லாம் செய்யுள் வழக்காகத்தான் இருந்தது. பொதுமக்கள்தான் நம் போலப் பேச்சுக்கள்-உரை நடை என்கிற-"புரோஸ்" என்று சொல்லப்படுகிற-வகையிலே பேசி வந்தார்கள். பிற மக்கள் அதாவது புலவர்கள் எல்லாம் எழுதுவது மட்டுமல்ல, பேசுவது கூடச் செய்யுளாகவே இருந்தது, அந்தக் காலத்திலே! இப்பொழுது ஆங்கிலத்திலே "கலோக்கியல்", "லிட்டரரி" என்று பிரிப்பார்கள். நாம் இப்பொழுது உலக வழக்கு, இலக்கிய வழக்கு என்றே சொல்கிறோம். ஆனால் பண்டைக் காலத்திலே எல்லாம் உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்றுதான் சொன்னார்கள். பண்டை மக்கள் என்று சொல்லும் போது நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.

அவர்கள் தெற்கே முழுகிப் போன குமரி நாட்டிலே இருந்த வர்கள். தமிழர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் அல்லர்; சிலர் பலர் கருதுகிறபடி! தென்னாட்டுப் பழங்குடி மக்கள். அந்தத் தமிழும் தென்னாட்டிலே தோன்றியது. தமிழைச் சிறப்பாக ஒருவர் ஆராய்ந் திருந்தால்-வரலாற்று அடிப் படையிலே ஆராய்ந்திருந்தால்-அதன் உண்மையை அறிவார்கள். தமிழ் வெளிநாட்டிலிருந்து வந்தது என்று எவராவது சொல்வதாய் இருந்தால், ஒன்று அவர்கள் தமிழைச் சரியாக அறியவில்லை என்பது; அல்லது அவர்கள் தமிழ்ப் பகைவர்கள் என்பது; இந்த இரண்டில் ஒன்று என்ற அந்த முடிவுக்குத்தான் வரமுடியும். தமிழ் தென்னாட்டிலே தோன்றிய மொழி. ஆகையினால் இந்த ரோமா புரித் தொடர்புக்கு முன்னாலேயே அது இருந்தது. அந்தத் தமிழ் நாட்டு வரலாறு, இந்த ரோமாபுரித் தொடர்பு என்றால், ரோமர்களுடையது இந்த கி. மு. 8ஆம் நூற்றாண்டு. அதற்கு முன்னாலேயே எகிப்து நாட்டோடும் சுமேரிய நாட்டோடும் தொடர்பு இருந்தது.

அடுத்து, ரோமாபுரிப் பாண்டியன் என்ற புதினம் இந்த அரங்கத்திலே இப்போது வெளியிடப் பெறும்.