பக்கம் எண் :

82பாவாணர் உரைகள்

இதிலே இவர்கள், உள்ளோன் தலைவனாக, உள்ளதும் இல்லதும் புணர்த்து அழகாக எழுதி இருக்கிறார்கள். இதைப் பார்க்கும்போது இவர்கள் பிறப்பிலேயே இதற்குரிய திறன் அமைந்தவர்கள் என்று நினைக்கும்படியாக இருக்கின்றது. கரிகால் வளவனே திரும்ப நம் கருணாநிதியாராகப் பிறந்தானோ என்றுகூட நாம் நம்பும்படியாக இருக்கின்றது. அந்தக் கரிகால் வளவனும் இந்தக் காவிரி நாட்டிலேயே தான் பிறந்தான். இவரும் அந்த நாட்டிலேதான். அந்தப் பூம்புகாரை அவன் வளப்படுத்தினான். இவரும் இப்போது அதைப் புதுப்பித்து வருகின்றார். காவிரிக்கு அவன் கரை கட்டினான். இவரும் காவிரி நீருக்கு ஒரு வரம்பு கட்டுவதற்கு இயன்றவரை முயல்கின்றார். அவன் இளமையிலேயே பகைவராலே இடர்ப்பட்டுத் துன்பப்பட்டு அதிலிருந்து தப்பினான். அப்படியே இவரும் போன பொதுத் தேர்தலிலே எப்ப டியோ பகைவரிடத்தில் அகப்பட்டுத் தப்பினார் என்பது எல்லாருக்கும் தெரிந்தசெய்தி. இந்தப் பெயரைப் பார்த்தால் கூட அந்த முதல் எழுத்து கரிகாலன்; கருணாநிதி என்கிற முதல் அசை கூடக் கொஞ்சம் ஒத்து வருகிறது. இனி அந்தக் காலத்திலேயே அவரைப் பற்றி ஏதாவது ஒரு புகைப்படமோ பூச்சுப்படமோ இருந்திருந்தால் இவர் முகச்சாடைகூட ஒத்துப் போகுமோ என்றுகூட நாம் நினைக்கும்படியாக இருக்கிறது. அந்த அளவிற்கு இவர்களுடைய உள்ளம் முழுவதும், இவர்களுடைய அறிவு, நினைவு, மதி மூன்றும், அந்தப் பூம்புகாரைப் புதுப்பிப்பது, காவிரியை வளப்படுத்துவது இவற்றிலேயே முனைந்திருக்கின்றது.

இவர்கள் இப்போது அதிகார முறையிலே, ஓர் அரசன் நிலையிலே, ஆளுகின்ற அரசன் நிலையிலே, இருக்கின்றார்கள்.

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு.
(குறள். 382)

தூங்காமை கல்வி, துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு.
(குறள். 383)

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.
(குறள். 671)

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.
(குறள். 672)

இப்படி, பல திருக்குறளைப் பார்த்தால் அவற்றிற்கெல்லாம் ஒரு சிறந்த இலக்கியமாக இவர்கள் விளங்குகிறார்கள். பண்டை நாளிலே பாண்டியநாட்டிலே மூன்று கழகங்கள் இருந்தன, தமிழை வளர்ப்பதற்கு. இவற்றுள்ளே முதல் கழகத்திலே எழுவர் பாவரங்கேறினர். பா என்றால் செய்யுள். இரண்டாவது கழகத்திலே இடைக் காலத்திலே ஐவர் பாவரங் கேறினார்கள். கடைக் கழகத்திலே மூவர் பாவரங்கேறினார்கள் என்று சொல்லப்படுகிறது. ஈராண்டுகளுக்கு முன்பு இதே இடத்திலே இவர்கள் பாவரங்கேறினார்கள் என்பது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். அதிலேதான் இவர்களுக்கு "தமிழவேள்" என்ற பட்டமும் பேராசிரியர் களால் அளிக்கப் பட்டது. இந்தத் தமிழகம் முழுதும் மட்டுமின்றித் திராவிட நாடுகளிலிருந்தும் கூட எல்லாத் தமிழ்ப் பேராசிரியர்களும் இங்கு அன்று குழுமியிருந்தார்கள். அவர்களுடைய சார்பிலே அவர்களால் "தமிழவேள்" என்ற பட்டமானது இவர்களுக்கு வழங்கப் பட்டது. அதிலே இவர்கள்