பக்கம் எண் :

44மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்

என்னும் பகுதிகளிலிருந்து தலைமை குறிக்கும் நம்பன், நாயகன் என்னும்
பெயர்கள் தோன்றியிருத்தலையும் நோக்குக.

     'வடுக வரசர்க்குச் சிறந்தார் சோழியவரசர்' என்பது பழைய வழக்கு.
     விழுக்கழஞ்சு, விழுப்புண், விழுப்பேறு முதலிய தொடர்களில்,
விழுச்சொல் சிறப்புக் குறித்தல் காண்க.

     விழு - விழுமு. விழுமுதல் = சிறத்தல். விழுமிய = சிறந்த.

     ஒ.நோ: குழு - குழுமு - குழுமிய.

     விழுமு - விழுமம் = சிறப்பு.

     விழு - விழுப்பு-விழுப்பம் = சிறப்பு. விழுப்பு + அரையன் =
     விழுப்பரையன்.

     விழு - விழா - விழவு = விரும்பிச்செய்யும் கொண்டாட்டம். விழா-
     வ்ரா (வ.).

     அண்ணாமலை பல்கலைக்கழக வெளியீடாகிய தமிழ் வரலாறு என்னும்
போலியாராய்ச்சி நூலில், வ்ரா என்னும் வடசொல்லினின்று விழா என்னும்
தென்சொல் பிறந்துள்ளதாகக் கூறியுள்ள கூற்றின் புன்மையையும்
புரைமையையும் நோக்கித் தெளிக.

     விழு - விழை. Gk. philos, desire.

     Philanthropy, Philology முதலிய ஆங்கிலச் சொற்களின் முதனிலை
விழைவுச் சொல்லே.

     விழை - விழைச்சி = இன்பநுகர்ச்சி, புணர்ச்சி.

     விழை - விழைச்சு = புணர்ச்சி.

     விழை - விழாய்-விடாய் = நீர்வேட்கை, விருப்பம்.

     விழு - விள் - விரு - விருந்து = விரும்பியிடும் சிறந்த வூண், அவ்
     வூணுக்குரிய புத்தாள், புதுமை.

     விரு - விரும் - விரும்பு.

     விள் - வெள் - வெம். வெம்மை = விருப்பம்.

     "வெம்மை வேண்டல்"(தொல். 817)

     வெம்மை-வெய்யோன் = விரும்புகின்றவன், விரும்பப்படத் தக்கவன்.

     ஒ.நோ: செம்மை - செய்யோன் - சேயோன்.

     வெள்-வேள்=விரும்பு (வி.), விரும்பத்தக்க தலைவன், தலைவன்,
     சிற்றரசன், காதலை யுண்டுபண்ணும் காமன், குறிஞ்சித் தலைவனாகிய
     முருகன்.

     வேள் + ஆளன் - வேளாளன் = பிறரை விரும்பி விருந்தோம்பும்
     உழவன்.