பக்கம் எண் :

கனம் கிருஷ்ணையர் 45

    "வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்"(திரிகடு. 12)

    வேள் + ஆண்மை (ஆள் + மை) = வேளாண்மை = வேளாளன்

    தன்மையாகிய விருந்தோம்பல், அவன் செய்யும் பயிர்த்தொழில்.

    வேள் - வேளான் = முருகன் கோயிற் பூசாரியாகிய குயவன்.

    வேள் + கோ = வேட்கோ = குயவர் தலைவன், குயவன்.

    வேள் - வேண் = விருப்பம். வேண் + அவா = வேணவா.

    வேள் - வேண்டு, ஒ.நோ: E. want.

    வேண்டு - வேண்டும் (தன்மைப் பன்மை உடன்பாடு)

    வேண்டு - வேண்டாம்-வேண்டா (தன்மைப்பன்மை எதிர்மறை)

    வேள் - வேட்கை = விருப்பம், நீர் விருப்பம் (தாகம்).

    வேள் - வேள்வி = ஒன்றை விரும்பிச் செய்யும் யாகம், விருந்
     தோம்பல், திருமணம், விழா.

    வேள் - வேள்வு = யாகம், திருமண வரிசை.

    வேள் - வேட்டம் = உயிரிகளை விரும்பிப் பிடித்தல்.

    வேள் - வேட்டை = உயிரிகளை விரும்பிப் பிடித்தல்

    வேட்டம் - வேட்டுவன் - வேடுவன் - வேடு - வேடன் = வேட்டைத்
     தொழிலோன்.

    விள் - பிள் - பிண் - பிணா - பிணவு - பிணவல் = விரும்பப்படும்
     பெண், பெண்விலங்கு.

     பிண் - பிணை = பெண் விலங்கு. பிண் - (பிணி) - பிடி.

     வெள் - பெள் - பெட்பு = விருப்பம், காதல்.

     பெள் - பெண் - ஆடவனால் விரும்பப்படுபவள்.

     பெள் - (பெட்டு) - E. Pet.

    பெண் - பெண்டு. பெண்டு + ஆட்டி = பெண்டாட்டி.

     பெண்-பெண்ணை = காய்க்கும் பெண்மரம், பெண்பனை, பனை.

    பெண்ணை - பெண்ணையன் = பெண்டன்மையன்.

     பெண் - பேண். பேணுதல் = விரும்புதல், விரும்பிப் பாதுகாத்தல்.

     பெள்-பெட்டு-பெட்டை-பெடை-பேடை-பேடு-பேடன்,
     பேடி.

     இதுகாறும், மூன்று சொற்குடும்பங்கள் காட்டப்பட்டன.

     கல் என்னும் வேரடிச் சொற்றொகுதிகள் காழ் கண் என்னும்
அடிகளினின்று பிறந்து கருமை என்னும் வேர்க்கருத்து மறைந்து,
விளையாடு, எரி, பார், கா முதலிய வினைப்பொருள்களைப் பெற்ற, களி
காய் கண் காணி முதலிய சொற்களைக் கொண்ட தொகுதியாதலின்,
சொற்குலமென்றும்; ஈண்டுக் காட்டப்பட்ட தில் வகு வீழ் என்னும் மூவடிச்