பக்கம் எண் :

92மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்


13. கருப்பும் கறுப்பும்

     தமிழ்ப் புலவர்க்கெல்லாம், "மொழிப்பொருட் காரணம்" என்று (877)
தொல்காப்பியர் கூறும் வேர்ச்சொற்பொருள் தெரியும் அல்லது தெரிந்திருக்க
வேண்டும் என்னும் தவறான கருத்து, பொதுமக்கள் உள்ளத்தில் மட்டுமன்றிப்
புலமக்கள் உள்ளத்திலும் இருந்துவருகின்றது. சொல்லாராய்ச்சி ஒரு
தனிக்கலை யென்பதை அவ் விருசாராரும் இன்னும் அறிந்திலர்.
பல மொழிகள் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டிருப்பதால்,
சொல்லாராய்ச்சியும் மொழியாராய்ச்சியின்றிச் செய்தல் ஒண்ணாது. ஆங்கிலப்
பேராசிரியர் எத்துணைப் பெரும்புலவராயிருப்பினும் மொழி நூலாசிரியர்
கருத்தறிந்தே வேர்ச்சொற் பொருள் கூறுவர். தமிழ்ப் பேராசிரியரோ, தம்மை
எல்லாமறிந்த சித்தராகக் கருதிக்கொண்டு, ஒருவர் ஒரு சொற்கு வேர்
வினவிய மட்டில், பொருந்தப் பொய்த்தலாகவும் பொருந்தாப்
பொய்த்தலாகவும் ஒன்றைச் சொல்லிவிடுவதுடன், மொழியாராய்ச்சியாளரொடு
முரணுவதும் போட்டியிடுவதும் செய்கின்றனர்.

     "கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்

      சொல்லா திருக்கப் பெறின்"(403)

என்னும் குறட்குப் பொதுக்கல்வி கல்லாதவர் மட்டுமன்றித் தனிக்கலை
கல்லாதவரும் இலக்காவர்.

     முப்பதாண்டுகட்கு முன்னரே, ஒரு பெரும்புலவர் வடை என்னுஞ்
சொற்கு வடு என்பது வேர் என்றார். இக்காலத்தில், ஒரு பேராசிரியர் காரன்,
காரி என்னும் ஈறுகள் வடசொற்கள் என்றெழுதுகின்றார். மற்றொருவர்,
"குரங்கின் ஏற்றினைக் கடுவன் என்றலும்" என்னும் தொல்காப்பிய
நூற்பாவில் (1568).

     "முடிய வந்த அவ்வழக் குண்மையின்

      கடிய லாகா கடனறிந் தோர்க்கே"

என்று தமிழ்ச்சொற்குக் கூறியதைப் பிறமொழிச்சொற்கும் கூறியதாகப் பிறழ
வுணர்ந்து, சைக்கிள், மோட்டார், பசு (Bus), ரேடியோ முதலிய
சொற்களையும் தமிழில் தழுவலாம் என்கிறார். இன்னுமொருவர், இந்தியால்
தமிழ் கெடவிருப்பதை,