பக்கம் எண் :

கலைச்சொல்லாக்க நெறிமுறைகள் 99

     கள் = தேன், மது = தேன். தேன் = கள். தேறல் = கள்.

     இங்ஙனம் உணர்த்தினும் இச் சொற்கள் தம் வேர்ப்பொருள் மாறா.
கள், மது என்னும் சொற்களின் வேர்ப்பொருள் மேற்காட்டப்பட்டது. இனி,
தேன், தெளிவு. தேறல் என்னும் சொற்களின் சொல்லியல் வரலாறு வருமாறு:

     தெல் - தென் - இனிமை.

     ஒ.நோ: வெல் - வென் - வெற்றி.

     "தென்னிசை பாடும் பாணன்"(திருவாலவாயுடையார் திருவிளையாடற்
      புராணம். 56 :. 7)

     தென் என்னும் சொல் முதலாவது தெளிவு என்று பொருள்பட்டு,
பின்பு தெளிவான தேனையும், தேனின் சுவையான இனிமையையும்
உணர்த்திற்று.தென் - தென்பு = தெளிவு. தென்பு - தெம்பு = தெளிவு.
தெளிவு என்பது முற்கூறியவாறு பொருட்டெளிவு, மனத்தெளிவு ஆகிய
இரண்டிற்கும் பொதுவாதலால், தெம்பு என்பது உலகவழக்கில்
மனத்தெளிவை உணர்த்திற்று.

     ஒ.நோ: நல் + பு = நன்பு (நன்மை)

     தெல் - தெள் - தெளி - தெளிவு.

     தெல்-(தெர்)-தெரி. தெரிதல்=தெளிவாய்த் தோன்றுதல், புலனாதல்.

     (தெர்) - தெருள். தெருள்தல் = தெளிதல்.

     சொல்லாக்கத்தில், லகர ளகர மெய்கள் ரகர மெய்யாகத் திரிவது
பெரும்பான்மை.

     எ-கா: சாம்பல் - சாம்பர், கள் - (கர்) - கரு - கருப்பு.

     தெள் - தெறு - தெற்று.

     ஒ.நோ: வெள் - வெறு - வெற்று, வெள்ளிலை - வெற்றிலை

     தெற்று = தெளிவு, தேற்றம்.

     தெற்றென = தெளிவாக

     "யானுந் தெற்றென வுணரேன்" (அகம். 48).

     தெற்றெனவு = தெளிவு.

     "தெற்றென வில்லார் தொழில்" (திரிகடு. 54).

     தெற்றென்னுதல் = தெளிதல்.

     "தெற்றென்க மன்னவன் கண்" (குறள் 581).

     தெற்றல் = அறிவில் தெள்ளியவன்.

     "இனையரு திற்றுவீழ நடைகற்ற தெற்றல்"

                               (திவ். பெரிய திருமொழி 11 : 4 : 9)

தெறு - தேறு, தேறுதல் = தெளிதல்

தேறு = தெளிவு, தேற்றம், தேற்றாங்கொட்டை.