மொழிநூல் நோக்கும் சொல்லாராய்ச்சியுமின்றித் தொல்காப்பியரைப் பெருமைப்படுத்த வேண்டுமென்றே கருதுபவர், தமிழுக்கு நேரும் இழிவையும் இழுக்கையும் எள்ளளவும் எண்ணிப் பார்ப்பதில்லை. |
சிலர் 62ஆம் தொல்காப்பிய நூற்பாவின் பாட வேறுபாட்டிலுள்ள 'அவை' என்னும் சொல்லைச் 'சகரக்கிளவி' என்பதனொடு தொடர்புபடுத்தி எண்ணிசைவில்லை யென்றும் மயங்குகின்றனர். 'அவை' என்பது முந்தின அடியிலுள்ள 'அவற்று' என்பதையே சுட்டுகின்றது. |
'சகரக்கிளவியும் க த ந ப ம எனும் அவற்றோ ரற்றே, அவை ஒள என்னும் ஒன்றலங் கடையே' என்று இசைத்து, எளிதாகவும் இயற்கை யாகவும் தொடர் முடிபுகொள்வதைக் காண்க. |
இனி, ' அஐ ஒள எனும்' என்னும் பாடத்தினும், 'அவைஒள என்னும்' என்னும் பாடம் எதுகைக்கும் ஒழுகிசைக்கும் ஏற்றதாயிருத்தலையும் நோக்குக. |
ஆகவே, சகரமுதற் சொல்லும் தொன்றுதொட்ட தமிழ் வழக்கே யென்றும், அதுவும் இன்றியமையாத பெருவழக்கென்றும், அறிந்து கொள்க. |
4. தமிழின் தொன்மை |
நிலநூலியல் ஊழிகள் (Geological Eras) |
| 1. தொடக்க நிலையுயிர் ஊழி (Archezoic Era) 2. முந்துநிலையுயிர் ஊழி (Proteroxoic Era) 3. பண்டைநிலையுயிர் ஊழி (Paleozoic Era - Primary Period) 4. இடைநிலையுயிர் ஊழி (Mezozoic Era - Secondary Period) 5. அண்மை நிலையுயிர் ஊழி (Cainozoic Era) |
அண்மை நிலையுயிர் ஊழிப் பிரிவுகள் |
1. மூன்றாம் மண்டலம் (Tertiary Period) |
| (1) விடியண்மை (Eocene) (2) சில்லண்மை (Miocene) (3) பல்லண்மை (Pliocene) |