வடவர் சுவணம் என்பதை ஸு பர்ண என்று திரித்தும், ஸு +பர்ண என்று பிரித்தும், அழகிய இலை, அழகிய இலை போன்ற சிறுகுகளை யுடையது. பெரும் பறவை, கலுழன் (கருடன்) என்று பொருள் விரித்தும், தம் ஏமாற்றுத்திறத்தின் எல்லையைக் காட்டியுள்ளனர். ஸு =நல்ல, பர்ண=இலை. மானியர் வில்லியம்சு சமற்கிருத ஆங்கில அகரமுதலியும் இவ்வாறே மூலங் கூறுகின்றது. |
வடவை |
வடம்-வடவை = வடக்கில் தோன்றும் நெருப்பு அல்லது ஒளி (Aurora Borealis), இது வடந்தை எனவும் படும். வடம் - வடந்தை. தாயுமானவரும் இதை வடவனல் என்பர். உத்தர மடங்கல்(திவா). உத்தரம் (பிங்) என்றும் இதற்குப் பெயருண்டு, உத்தரம் = வடக்கு. ஆராரோ போரியாலிசு என்னும் இலத்தீன ஆங்கிலச் சொல்லும் வடவொளி (northern lights) என்னும் பொருளதே.(Ch.T.C.D.). |
16ஆம் நூற்றாண்டு ஆங்கிலக் கலவர் போன்றே, வரலாற்றிற் கெட்டாத பண்டைத் தமிழக் கலவரும் (sailors) சுற்றுக் கடலோடிகளாய் (circumnavigators) இருந்தமையால், வடமுனையில் தோன்றும் பல்வண்ண மின்னொளியைக் கண்டு அதற்கு வடவை எனப் பெயரிட்டிருக்கலாம். |
வடவர், வடவை என்னுஞ் சொல்லை வடசொல்லாகக் காட்டல் வேண்டி, வடபா என்னும் அதன் வடமொழி வடிவிற்குப பெண்குதிரை என்று பொருளிருத்தலால், அதற்கேற்ப ஒரு கதையைக் கட்டி, வடபாக்னி என்றும் வடபா முகாக்னியென்றும் பெயர்விரித்து, பெண்குதிரை முகத்தில் தோன்றிய நெருப்பென்று பொருளுங் கூறிவிட்டனர். |
மா.வி.யின் ச - ஆ. அகரமுதலி அக் கதையையும் வரைந்து, வடபாக்னி என்னுஞ் சொற்கு "mare's fire sumbarine fire or the fire of the lower.regions (fabled to emerge from a cavity called the 'mare's mouth' under the sea at the South pole" என்று விளக்கமுங் கூறியுள்ளமை காண்க. |
இன்னும் இவற்றின் விரிவை என் `வடமொழி வரலாறு` என்னும் நூலுட் கண்டுகொள்க. 4. தமிழுக்கென்று தண்டப்பெற்ற பணம் முழுதும் தமிழுக்காகச் செலவிடப் பெறாமை. |