ஐம்பெருங்காப்பியம் என்னும் ஐம்பெரு வனப்புகளும் கி.பி.2ஆம் நூற்றாண்டிற்கும் 10ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டவை; வடசொற்களும் ஆரியக் கருத்துகளும் கலந்தவை அவற்றுள், சிலப்பதிகாரம் ஒன்றே. சிவனியமும் மாலியமும் சமணமும் பற்றிய குறிப்புகளைக் கொண்டிருப்பினும், பெரும்பாலும் எல்லாச் சமயத்தார்க்கும் பொதுவான அறநெறி பற்றியதாகும். ஏனைய நான்கனுள், இரண்டு புத்தமும் இரண்டு சமணமும் பற்றியனவே. மேலும், கதையிற் சிலப்பதிகாரமும் மணிமேகலையுமே தமிழகத்தைத் தழுவியவை: ஏனை மூன்றும் தமிழகத்திற்குப் புறம்பானவே. இங்ஙனமிருக்க, இவற்றைத் தமிழின் ஐம்மக்களாகக் காட்டுவது தமிழுக்கு இழுக்கேயென அறிக. |
9. `பூம்புகார்` நிகழ்ச்சிகட்கும் உலகத் தமிழ் மாநாட்டிற்கும் தொடர்பின்மை. |
10. மாநாடு ஆங்கிலத்தில் நடைபெற்றமை. |
தமிழிற் பேச இயலாதவரெல்லாரும் எழுதிப்படித்தல் வேண்டும். அதுவும் இயலாதவர் சும்மாவிருந்து பிறர் சொல்வதையும் படிப்பதையும் கேட்டல் வேண்டும். |
11. மாநாட்டிற்குப் பொதுக்கரணிகர் இன்மை. மாநாடு முழுவதையும் ஆண்டு நடத்தற்கேற்ற பொதுத் தலைவர் ஒருவர் இன்மையால், ஒவ்வொரு நாளும் அவரவர் மனத்திற்குத் தோன்றியவாறும் வாய்க்குவந்தவாறும் பொறுப்பற்றுப் பேசியும் படித்தும் முடித்துவிட்டுச் சென்றிருக்கின்றனர். |
12. கொடைமடம் தமிழ்நாட்டு முப்பல்கலைக்கழகங்கட்கும் திருக்குறட் பேராசிரியப் பதவி ஏற்படுத்துமாறு மும்மூன்றிலக்கம் உருபா கொடுக்கப்பட்டுள்ளது. திருக்குறள் எத்துணை ஒப்புயர்வற்ற உலகப் பெருநூலாயினும், முப்பல்கலைக் கழகத்திலும் அதை ஆராயத் தேவையில்லை. |