2. ஞால நடுமை |
ஞாலநடுவிடம் நண்ணிலக்கோட்டை (equator) யடுத்த குமரிக்கண் டமேயன்றி, சமதட்பவெப்ப மண்டலத்தைச் சார்ந்ததும் நண்ணிலக்கடல் என்று தவறாகப் பெயர் பெற்றுள்ளதுமான இடத்தைச் சேர்ந்ததன்று. |
ஆடையின்றி நீண்ட காலமாகக் குறிஞ்சிநிலத்தில் வாழ்ந்திருந்த இயற்கை மாந்தனின் உடல் முழுதும் போர்த்திருந்த மயிர் கழிவதற்கு, வெப்பநாடே ஏற்றது. |
3. இயற்கை வளம் |
இயற்கை விளையுளையே பெரும்பாலும் உண்டு வந்த முதற்கால மாந்த னுக்கேற்ற காயுங்கனியும் கிழங்கும் வித்தும் விலங்கும், பறவையும், மீனும், ஏராளமாய்க் கிடைத்திருக்கக் கூடியது குமரிக்கண்டமே. ஆடும் மாடும், ஊனும் பாலுந் தோலும் ஒருங்கே உதவின. |
4. உயிர்வாழ்விற்கு ஏற்பு |
நான்காம் மண்டலக்காலத்தில் ஐரோப்பாவிற் படர்ந்த பனிக்கட்டிப் படலம் போன்ற இயற்கைப் பேரிடர்ப்பாடு, குமரிக்கண்டத்தில் நிகழ்ந்ததில்லை. |
5. தமிழர் பழக்கவழக்கப் பழைமை |
பண்பட்ட தென்னாட்டுப் பழங்குடி மக்களான தமிழரிடையிருந்து அருகிவரும் காது வளர்ப்பு, பச்சை குத்தல் முதலியன. முந்தியல் மாந்தர் பழக்கவழக்கங்களாகும். |
6. முந்தியல் மாந்தர் வாழ்நில அண்மை |
விலங்காண்டியரும் அநாகரிகருமான முந்தியல் மாந்தர் வழியினர் வாழ் நிலங்களான ஆப்பிரிக்காவும் ஆத்திரேலியாவும், குமரிக்கண்ட மிருந்த இடத்தைச் சூழ்ந்தே யிருக்கின்றன. அநாகரிக நிலைக்கு அடுத்ததே நாகரிகநிலை. |
7. உலக முதல் உயர்தனிச் செம்மொழி வழங்கிய இடம் |
உலக முதற்றாய் மொழியாகிய தமிழ் வழங்கிய இடம் பழம் பாண்டி நாடான குமரிநாடே. |