16 | வண்ணனை மொழிநூலின் வழுவியல் |
மாந்தன் நாகரிக வளர்ச்சிக் கேற்றது குமரி நாடே. | சான்றுகள் | 1. புள்மாப் பெருக்கம் | உழவுத்தொழிற்குரிய காளையெருமை முதலியனவும், காவற் றொழிற்குரிய நாய் பூனை முதலியனவும், செய்தி விடுத்தற்குரிய கிளி புறா முதலியனவும், குமரிநாட்டில் ஏராளமா யிருந்தன. | 2. கருவிப்பொருள்வளம் | வீடு கட்டுவதற்குரிய மரமுங் கல்லும் சுண்ணாம்பும், கருவியும் கல மும்அணிகலமும் படைக்கலமும் செய்தற்குரிய பொன்னும் வெள்ளியும் செம்பும் இரும்பும் மரமும், ஆடை நெய்தற்குரிய பட்டையும் நாரும் பஞ்சும் மயிரும், கூரை வேய்தற்குரிய தட்டையுந் தாளும் புல்லுங் கோரையும் தழையும் ஓலையும், கூடையும் பெட்டியும் சுளகும் முறமும் முடைதற் கேற்ற மூங்கிலும் பனைநாரும், பாயுங் கட்டிலும் பின்னற்குரிய கோரை யும் நாரும், திருமுகமும் சுவடியும் வரைதற்கேற்ற மடலும் ஓலையும், இசைக்கருவிகள் செய்தற்குரிய மரமுந் தோலும் நரம்பும், தீக்கடை கோலுங் கட்டையும், இன்னோரன்ன பிறவும், குமரிநாட்டிற்போல் வேறெங் குங் கிடைத்திருக்க முடியாது. | 3. நானில அண்மை | குறிஞ்சி நாகரிகத்தினின்று முல்லை நாகரிகத்திற்கும் முல்லை நாக ரிகத்தினின்று மருத நாகரிகத்திற்கும் கலஞ்செலுத்தி ஆறு கடத்தனின்று கடல் கடத்தற்கும், அடுத்தடுத்துச் செல்லுமாறு நானிலமும் அணித்தணித் தாகத் தொடர்ந்தமைந்திருந்தது, குமரிநாட்டிலேயே. இந்நிலைமை இற்றைத் தமிழ்நாட்டிலு முண்டு. பஃறுளியாறும் குமரிமலைத்தொடரும் கங்கையும் பனிமலையும் போன்றி ருந்தனவே. | தமிழ் தோன்றிய இடம் குமரிநாடே | சான்றுகள் | 1. தமிழும் அதனொடு தொடர்புள்ள திரவிட மொழிகளும் நாவலந் தேயத்திற்குள்ளேயே வழங்குதலும், தென்மொழி வடக்கே செல்லச் செல்ல ஆரியப் பாங்கில் வலுத்தும் உருத்தெரியாது திரிந்தும் | | |
|
|