| ஆரியம் உலக முதன்மொழியன்மை | சான்றுகள் | | 1. ஆரியம் தமிழின் அல்லது திரவிடத்தின் திரிபேயன்றி ஒரு தனி மொழியன்று. ஆரியம் என்னும் இனப்பெயர் மொழித் திரிபினாலன்றி இனவேறு பாட்டால் ஏற்பட்டதன்று. 2. ஆரியத்தின் அடிப்படை தமிழே. ஆரியச் சொற்களின்றித் தமிழை வழங்கமுடியும், ஆயின், தமிழ்ச் சொற்களின்றி ஆரியத்தை வழங்கமுடியாது. 3. ஆரியர்க்கென்று ஒரு தனியிட மில்லை. இந்தியச் சிந்துவெளியினின்று ஐரோப்பியக் காண்டினே வியம் வெவ்வேறிடங்கள் ஆரியரின் பிறந்தகமாக அல்லது முதலிருப்பாகக் காட்டப்பெறுகின்றன. அவற்றுள் ஒன்றேனும் உண்மையான தன்று; அல்லது எல்லாம் சரியே. திரவிடம் ஆரியமாக முதன்முதலில் திரிந்த இடம் வட மேலை ஐரோப்பா. அங்கிருந்து தென்கிழக்காகப் படிமுறையாய்த் திரிந்து வந்து இந்தியாவிற்குட் புகுந்துள்ளது. சமற்கிருதம் என்னும் அரைச் செயற்கையான இலக்கிய நடைமொழி உருவானது இந்தியாவிலேயே. அதில் ஐந்திலிரு பகுதி தமிழே. ஆரியம் என்னும் பெயரும் முதன்முதல் இந்தியாவிலேயே தோன்றிற்று. அது பின்னர் மாக்கசு முல்லரால் மேலையின மொழி கட்கும் விரிவுறுத் தப்பெற்றது. 4. ஆரியம் மெல்லொலி மொழியன்று.உலக மொழிகட்குள் வல்லொலி முதிர்ச்சிபெற்றது ஆரியமே. அதன் வல்லொலித் தன்மை தியூத்தானியத்தில் தொடங்கி இந்திய ஆரியத்தில் முதிர்கின்றது. 5. ஆரிய மொழியிலக்கண வமைதி செயற்கை வளர்ச்சி பெற்றது. இருமையெண், இலக்கணப்பால், ஈறுபிரியாமை எழுவாயுருபு முதலியன இதற்கு எடுத்துக்காட்டாம். | | |
|
|