24 | வண்ணனை மொழிநூலின் வழுவியல் |
| இருமையெண் தியூத்தானியத்திலும் இலத்தீனிலும் இல்லை. 6. ஆரியத்தின் முந்துவடிவமென்று தவறாகக் கருதப்படும் சமற் கிருதத்தின் நெடுங்கணக்கும் புணர்ச்சியும் எண் வேற்றுமையும் தமிழைப் பின்பற்றியனவே. கால்டுவெலார் காலத்தில் பண்டைத் தமிழிலக்கியம் மறைப்புண்டு கிடந்தமையாலும், தமிழரிடை விழிப்பின்மையாலும், அவர் சமற்கிருதம் தமிழுக்குப்பட்டுள்ள கடனைத் தலைகீழாக மாற்றிக் கூறிவிட்டார். 7. ஆரியமொழிகளிலுள்ள தென்சொற்கட்கெல்லாம் திருந்திய வடிவும் வேர்ப்பொருளும் தமிழிலேயே உள்ளன. 8. தொல்காப்பியம் ஆரிய வேதங்கட்குக் காலத்தாற் பிற்பட்ட தேனும் பொருளால் முற்பட்டதே. தலைக்கழக நூல்களிற் சொல்லப்பட்ட இலக்கணத்தையே சார்பிற் சார்பான தொல்காப்பியம் எடுத்துக் கூறுகின்றது. ஆயிரக்கணக்கான முதலிரு கழக நூல்களும் ஆரியரால் அழிக்கப்பட்டுவிட்டமையால், இன்று பண்டைத் தமிழிலக்கியம் சமற்கிருத இலக்கியத்திற்குப் பிற்பட்டதாகத் தோன்றுகின்றது. 9. நான்காம் மண்டலக் காலத்தில் (கி.மு. 475,000 - 25,000) ஐரோப்பாவிற் பனிக்கட்டிப்படலப் படர்ச்சியிருந்தமையால், கி.மு. 50,000 ஆண்டுகட்கு முன் குமரிநாட்டில் தோன்றிய தமிழே உலகமுதன் மொழியாயிருத்தல் வேண்டும். ழுஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ்ழு என்பதே அறிவுடைத் தமிழர் கொள்கை. 10. ஆரியமொழி தமிழ்போல் மொழிவளர்ச்சியின் முந்து நிலைகளைக் காட்டவில்லை. 11. ஆரியமொழி வரலாறு தமிழ்போற் குறிஞ்சி முல்லை மருதம் ஆகிய முந்தியல் மாந்தர் நாகரிக வளர்ச்சி நிலையங்களைக் காட்டவில்லை. | | |
|
|