26 | வண்ணனை மொழிநூலின் வழுவியல் |
| வேந்தனும் தெற்கத்தியானேயென்றும், எகிபதிய மொழி ஐரோப்பிய மொழிகட் கெல்லாம் மூலமான அசைநிலை மொழியென்றும், அது சமற் கிருதத் திற்கு மூவாயிரம் ஆண்டு முற்பட்ட தென்றும், தம் 'ஓர் எகிபதிய அரசி யின் பள்ளிபடைப்படமாடம் (The Funeral Tent of An Egyptian Queen) என்னும் வரலாற்றாராய்ச்சி நூலின் இறுதியிற் கூறியுள்ளார். முற்காலத்தில் அரபிக்கடற்பரப்பு நிலமாயிருந்ததினால் குமரிக் கண்டத்தினர் நிலவழியாக வட ஆப்பிரிக்காவிற்குச் சென்றிருத்தல் கூடும். 5. நோவாகாலத்துப் பெருவெள்ளத்தின் பின் மக்கள் கிழக்கினின்று வந்தார்களென்று திருமறை கூறுகின்றது. "மக்கள் கிழக்கேயிருந்து வழிச்செல்கையில் சினெயார் நாட்டிலே சமநிலத்தைக் கண்டு அங்கே குடியிருந்தார்கள். (முதற் பொத்தகம், 11:2) 6. நோவா காலத்திற்கு முன்பே ஐரோப்பாவிற் குடியேறிய மக்கள் வெள்ளையராகிவிட்டனர். தேவ புதல்வர் மாந்தர் மகளிரை மிகுந்த அழகியராகக் கண்டு, அவர்களிடமிருந்து தங்கட்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார் கள். (திரு மறை, மு.பொ. 6:2) அக்காலத்து மக்கள் வெள்ளையரைத் தேவரென்று கருதினர். "அந்நாள்கறிற் பாரில் அரக்கர் இருந்தனர்." (திருமறை.மு.பொ.6:4) அரக்கர் எனப்பட்டவர் ஆப்பிரிக்கராயிருந்திருத்தல் வேண்டும். 7. ஐவேறு அல்லது அறுவேறு மொழிநிலைகளில், மாந்தரினத்தார் வெவ்வேறு திசைநோக்கிப் பிரிந்து சென்று வெவ்வேறு மொழி யினராகவும் நிறத்தினராகவும் இனத்தினராகவும் மாறுதற்கு ஏற்ற வாறு, மிகப் பழமையான தாய்நிலப்பகுதி குமரிக்கண்டம் ஒன்றே. 8. தமிழ்ச்சொற்கள் மட்டுமன்றித் தமிழர் பழக்கவழக்கங்களும் பண்டையுலகமெங்கும் பரவியிருந்திருக்கின்றன. 9. நாடு முழுவதும் முழுகுமாறு நிகழ்ந்த ஒரு பெருவெள்ளக்கதை, ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு வகையிற் சொல்லப் பெறுகின்றது. | | |
|
|