பக்கம் எண் :

மொழிநூல்27

  ஒருகால், இக் கதை, பழம் பாண்டிநாட்டைத் தன்னுட் கொண்ட குமரிக்கண்டக் கடல்கோள்களுள் ஒன்றைக் குறித்ததாக இருக்கலாம்.
தமிழ்நாட்டுக் கடல்கோள்களுள் ஒன்றைக் கூறும் சதாபத பிராமணம் என்னும் வேதக்கால வடநூல், ஒரு கடல்கோளுக்குத் தப்பிய அரசனைத் திராவிடபதி என்றும் அவன் பேழை தங்கிய இடத்தை வடமலை (குட மலை) என்றும் குறிக்கின்றது.
நாட்டிலுள்ள விலங்கு பறவைகளெல்லாம் ஒவ்வோரிணை உள்ளடங்கு மாறு, மாபெரு மரக்கலத்தை 4500 ஆண்டுகட்கு முன் செய்யக்கூடிய வன், தமிழன் ஒருவனே,
10. தமிழரின் எழுநாட்கிழமை தொன்றுதொட்டு நாகரிக நாடுகளி லெல்லாம் வழங்கிவருகின்றது.
தமிழின் பொற்காலம்
  எல்லாவகையிலும் தமிழ் தலைசிறந்திருந்த காலம் தலைக்கழகக் காலமே. அதன் சிறப்பு நிலைமைகளாவன:
1. அயன்மொழிச்சொல் ஒன்றுங் கலவாது தமிழ் முழுத் தூய்மையாய் வழங்கியமை.
2. பொதுமக்களும் தமிழைத் திருத்தமாய்ப் பேசியமை.
3. இலக்கணநூல்கள் இடைக்கழகத்திற் போன்றே முத்தமிழாய் இயன்றமை.
4. புலவர் பெருந்தொகையினரா யிருந்தமை.
5. புலவரெல்லாரும் தமிழரா யிருந்தமை.
6. நூல்களெல்லாம் அழியாதிருந்தமை.
7. செந்தமிழ்ப் பாண்டிநாடு தெற்கே ஈராயிரங்கல் தொலைவு நீண்டும் பரந்தும் இருந்தமை.
முக்கழகத் தலையிடைகடைமை
 

தலை இடை கடை          

  உறுப்பினர் தொகை 549   59   49
பாடினார் தொகை  4449  3700 449