பக்கம் எண் :

28வண்ணனை மொழிநூலின் வழுவியல்

     தலை இடை கடை
   கழகமிருந்த ஆண்டுத்தொகை 4440 3700 1850

கழகம் புரந்த பாண்டியர் தொகை

89 59 49

பாவரங்கேறிய பாண்டியர் தொகை

7 5 3

5. தமிழ் மறைப்பு

     ஆரியப் பிராமணர் இந்தியப் பழங்குடிமக்களை என்றும் தம் அடிப் படுத்தித் தாமே உயர்வாக வாழத் தீர்மானித்ததால், தமிழரின் உயர்வைக் காட்டும் தமிழ்மொழியையும் இலக்கியத்தையும் இயன்றவரை மறைக்கத் திட்டமிட்டு, அதற்கு அடிமையரும் தந்நலக்காரருமான தமிழரைப் பல்வேறு வகையில் துணைக்கொண்டனர்.
     ஆகவே, தமிழை மறைத்தவர் புறப்பகைவரும் அகப்பகைவரும் என இரு சாரார். புறப்பகைவர் செயல்களை என் 'தமிழ் வரலாறு' என்னும் நூலில் 'சிதைநிலைப் படலம்', 'மறைநிலைப் படலம்' என்னும் இரு பகுதிகளிற் காண்க.

தமிழைக் கெடுத்த தமிழர்

1. முத்தமிழ் வேந்தர்
     ஆரியர் வருகைக்குப் பிற்பட்ட முத்தமிழ் வேந்தருள் பெரும் பாலோர் ஆரியத்தைத் தலைமையாகக் கொண்டு தமிழைக் கெடுத்தனர். அவருள், பாண்டியன் பல்வேள்விச்சாலை முதுகுடுமிப் பெருவழுதியும் சோழன் அரச வேள்வி (இராசசூயம்) வேட்ட பெருநற்கிள்ளியும் சேரன் பல் யானைச் செல்கெழு குட்டுவனும் முதன்மையானவர் ஆவர்.
2. குயக்கொண்டான்
     நக்கீரர் காலத்தில் கொண்டான் என்னும் குயவன் அவர் முன்பு 'ஆரியம் நன்று; தமிழ் தீது.' எனவுரைத்து, அவராற் சாவிக்கப்பட்டுப் பின்னர்ப் பிறர் வேண்டுகோளால் உயிர்ப்பிக்கப்பெற்றான்.
3. புத்தமித்திரன்
     கி.பி. 11ஆம் நூற்றாண்டில் புத்தமித்திரன் என்னும் சிற்றரசன் வடமொழி யிலக்கணமும் தமிழிலக்கணமும் ஒன்றேயென்று பொருந்தாவகையிற் பொருத்தியும் வடமொழியை யுயர்த்தியும், வீரசோழன் பெயரால் வீர சோழியம் என்னும் ஐயதிகாரப் பிண்ட வழுநூலை இயற்றினான்.