பக்கம் எண் :

மொழிநூல்29

4. சுவாமிநாத தேசிகர்
      18ஆம் நூற்றாண்டில், திருவாவடுதுறைச் சிவமட வளாகத்தைச் சேர்ந்த சுவாமிநாத தேசிகர் என்னும் துறவியார், வீரசோழியக் கொள்கையை விரு விருப்புடன் த ழுவி. சொல்லிலக்கணம்பற்றிய சில நூற்பாக்களை இயற்றி 'இலக்கணக் கொத்து' என்று பெயரிட்டுத் தமிழுக்கு இரண்டகம் செய்தவர். தம் நூலின் பாயிரத்தில்,
  "...........................................................
தொல்காப் பியந்திரு வள்ளுவ ராதிநூல்
வடமொழி நியாயம் வந்தன சிலவே
............................................................
வடநூல் வழிகல வாதே தமிழைத்
தனியே நீர்தராத் தன்மை யென்னெனின்
இலக்கணம் இலக்கியம் ஏது நிமித்தம்
சாத்திரம் சூத்திரம் தந்திர வுத்தி
பகுதி விகுதி பதமே பதார்த்தம்
ஆதி அந்தம் அகாரம் மகாரம்
உதாரணம் மாத்திரை உவமை உருவகம்
விகற்பம் சந்தி விதியலங் காரம்
காலம் இலேசம் காரகம் ஞாபகம்
விசேடணம் விசேடியம் விகாரம்அதி காரம்
குணம்குணி யாதியாஞ் சொற்கோ ளன்றியும்
பிறிதினியை பின்மை நீக்குதல் பிறிதி
னியைபு நீக்குதல் என்னும் இலக்கணம்
முதலாப் பலவா மொழிபெயர்த் தனவும்
கொண்டனர் பண்டையர் உண்டோ இன்றோ
அன்றியுந் தமிழ்நூற் களவிலை யவற்றுள்
ஒன்றே யாயினுந் தனித்தமி ழுண்டோ
அன்றியும் ஐந்தெழுத் தாலொரு பாடையென்
றறையவே நாணுவர் அறிவுடை யோரே
ஆகையால் யானும் அதுவே அறிக
வடமொழி தமிழ்மொழி யெனுமிரு மொழியினும்
இலக்கணம் ஒன்றே யென்றே யெண்ணுக
..............................................................