பக்கம் எண் :

46வண்ணனை மொழிநூலின் வழுவியல்

  சம்புசிவ சங்கர சர்வேச வென்றுநான்
   சர்வகாலமு நினைவனோ
அற்புத வகோசர நிவர்த்திபெறு மன்பருக்
   கானந்த ர்த்தியான
அத்துவித நிச்சய சொரூபசா க்ஷாத்கார
   அனுதி யனுசூதமுங்
.....................

கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
   கருணா கரக்கடவுளே"

என்று தாயுமானவரும், பாடியவை தமிழர் பாடல்களேயாயினும் ஆரிய மயக்கிற் பாடப்பட்டவையாதலால், தமிழர் வடமொழியைத் தழுவவேண்டு மென்பதற்குத் தாங்கலாகவெனக் கூறிவிடுக்க.
      இனி முருகன் (குமரன்). மாயோன் (திருமால்), கொற்றவை (காளி) என் னும் மூவரும் ஆரிய வருகைக்கு முற்பட்ட குமரிநாட்டுத் தூய தமிழ்த் தெய் வங்களே. ஆரியரே அத் தெய்வங்கட்குச் சுப்பிரமணிய, விஷ்ணு, துர்க்கா என்னும் புதுப் பெயர்களை முறையே இட்டுக்கொண்டனர்; குமரன் என்னும் பெயரைக் குமார என்றும், காளி என்னும் பெயரைக் காலீ என்றும், நீட்டித் திரித்துக்கொண்டனர். விஷ்ணு என்னும் பெயர் வேதக்காலத்திற் கதிரவனையே குறித்தது.
      திரிமூர்த்தி என்னும் முத்திருமேனிக் கொள்கையை அடிப்படை யாகக் கொண்ட இந்துமதம் என்னும் பிராமண மதம், பிராமண மேற்குலப் பாட்டினாற் புகுத்தப்பட்டதேயன்றித் தமிழறிஞரால் அல்லது மெய்கண்டார் போலும் மெய்ப்பொரு ளாசிரியரால் ஒப்புக்கொள்ளப்பட்ட தன்று.
      ஒளவையார் திருவள்ளுவரின் உடன்பிறப்பல்லர்.
      அறம்பொரு ளின்பம் வீடென்னும் உறுதிப்பொருட் கோவை தமிழர் கண்டதே. ஆரியரே அதைத் தர்மார்த்த காமமோட்சமென மொழி பெயர்த்துக் கொண்டனர்.
      சமணரும் புத்தரும் தமிழகத்திற்கு வந்து தமிழ்நூ லியற்றியதினால், தமிழ் தன் தூய்மையை அல்லது தொன்மையை இழந்துவிடவில்லை.
      வீட்டுலகத்தை யடைந்தவர் எவரும் இங்குத் திரும்பி வராமையால், வீட்டை வாயில் நடைவழியாகவும் ஒப்புமை வகையிலுந்தான் கூறமுடி