கோ - OS. ko, OE. ko,E.cow, Skt.go. இச் சொற்கு ஆரியமொழி களில் மூலமில்லை.
பிராமணர் நிலத்தேவர் என்றும் அவர் மொழி தேவமொழி யென்றும் தமிழர் மயங்கிய மயக்கத்தால், அவருடைய அகக்கரணங்கள் மரத்துப்போன காலத்தில், தமிழைக் கெடுக்க வேண்டுமென்றே ஆரியச் சொற்கள் அதில் தாராளமாகப் புகுத்தப்பட்டன. அவை தமிழர் விருப்பால் அல்லது தேவையால் தழுவப்பட்டவையல்ல. ஆயினும் இன்று அவற்றை, பண்டைத் தமிழர் வட சொற்களைக் கடன் கொண்டனர் என்று காட்டற்கும், வடமொழிச்சென்ற தமிழ்ச்சொற்களை வடசொற்கள் என்று திரித்தற்கும் சான்றாகப் பயன்படுத்தி வருகின்றனர். இது மடிமாங்காய் போடுதல் போன்ற கயமையே. வடமொழிச்சென்ற தென்சொற்களுட் பலவற்றின் விளக்கத்தை என் ?வடமொழி வரலாறு? என்னும் நூலுட் கண்டு தெளிக.