என்று திருவள்ளுவர் 'நீத்தார் பெருமை' யதிகாரத்திற் கூறியிருத்தல் காண்க. அந்தணர் என்னும் பெயர் சிறப்பாக ஐயர் என்னும் முனிவரையே குறிப்பினும், நால்வகைத் தலைவருள் முதல்வரைக் குறிக்கும் போது பார்ப்பார் என்னும் இல்லறத்தாரையும் தழுவும். இம் முப்பெயர்களும் ஆரியர் வருமுன் தமிழ வகுப்பார்க்கே வழங்கிய தூய தமிழ்ச்சொற்கள் என அறிக. பரம்-பரமன்-பரமம்(த.)-பிரமம்(வ.)-பிராமணன். பார்ப்பனன் என்னும் தென்சொற்கும் பிராமணன் என்னும் வடசொற்கும் யாதொரு தொடர்புமில்லை.