பக்கம் எண் :

மொழிநூல்43

  துளம்-துளர். துளர்தல் = மணம் வீசுதல்.
"துளருஞ் சந்தனஞ் சோலைகளூடெலாம்ழு (சூளா. இரத.5)
துளம்-துளவு = மணம்வீசும் செடி.
துளவு-துளவம்-துளபம்.
துளவு-துளசு-துளசி.
துளம்-(துளை)-துழாய். ஒ. நோ: மாதுளம்-மாதுளை,
நாளி-நாழி, கழை-கழாய்.
      துளசி-துலஸீ (வ.). துளசி முல்லைநிலச் செடியாதலால் முல்லை நிலத் தெய்வமாகிய மாயோனுக்கு உகந்தததாகக் கொள்ளப்பெற்றது.
      துண்ணுதல் = பருத்தல். துண்-தொண்-தொண்ணை = பருத்தது. துண் - தூ ண் - தூணி - தூணித்தல் = பருத்தல், தூண் = திரண்ட மரக்கம்பம் அல்லது கற்கந்து. தூண் - தூணம் = பருத்ததூண்.
      தூணம் - ஸ்தூண, ஸ்தூணா (வ.).
      வடவர் காட்டும் ஸ்தா (நில்) என்னும் மூலம் பொருந்தாது. திகைதல் = முடிதல், தீர்தல். திகை = முடிவு, எல்லை, திசை.
      "திகையெலாந் தொழச்செல்வாய்" (தேவா: 308: 1)
      திகை - திசை = எல்லை, எல்லைநோக்கிய விழுத்து (direction), எல்லைப்புறம், எல்லைப்புற நாடு. ஒ.நோ: சீமை (வ.) = எல்லை, நாடு.
  திசை - தேசம் = நாடு, இடம். இடப்பொரு ளுருபு.
தேசம் - தேயம் = நாடு, இடம், இடப்பொரு ளுருபு.
தேயம் - தேம் = இடப்பொரு ளுருபு.
தேம் - தே - தேவகை = இடவகை, இடப்பொரு ளுருபு.
திகை - திக்(வ.), திசை - திசா (ள) திச்(வ.)
      வடவர் திச் (காட்டு) என்பதை மூலமாகக் காட்டி, அது திக் என்று திரிந்த தாகக் கூறுவர். வடநூல் வேறு வழியாய் வந்ததாயின், திக்கா என்னும் பிராகிருதச் சொல்லினின்று வந்திருக்கலாம். நோக்கு (த., - (தேக் (பிரா.) = காண். தேக் திக்கா = காட்டு(பி. வி.) திக்கா - திக் (வ.). - திச் (வ.)