| | "இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென் றனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே.ழு |
| (880) |
| | "ஒருபொருள் குறித்த வேறுசொல் லாகியும் வேறுபொருள் குறித்த ஒருசொல் லாகியும் இருபாற் றென்ப திரிசொற் கிளவி.ழு |
| (882) |
| | "செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி.ழு |
| (883) |
| | "வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே.ழு |
| (884) |
| | "அந்நாற் சொல்லுந் தொடுக்குங் காலை வலிக்கும்வழி வலித்தலும் மெலிக்கும்வழி மெலித்தலும் விரிக்கும்வழி விரித்தலும் தொகுக்கும்வழித் தொகுத்தலும் நீட்டும்வழி நீட்டலும் குறுக்கும்வழிக் குறுக்கலும் நாட்டல் வழிய என்மனார் புலவர்.ழு |
| (886) |
| | "எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே.ழு |
| (640) |
| | "மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா.ழு |
| (877) |
| | "தெரிபுவேறு நிலையலும் குறிப்பிற் றோன்றலும் இருபாற் றென்ப பொருண்மை நிலையே.ழு |
| (642) |
| | "சொல்லெனப் படுப பெயரே வினையென் றாயிரண் டென்ப அறிந்திசி னோரே.ழு |
| (643) |
| | "இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும் அவற்றுவழி மருங்கில் தோன்றும் என்ப.ழு |
| (644) |
| சொல்லுறுப்புகள் புணரியல், வேற்றுமையியல், பெயரியல், வினையியல் ஆகிய இயல்களிற் கூறப்பட்டுள்ளன. |