சுருங்கை | | சுல் -சூல். சூலுதல் = தோண்டுதல். "நுங்குசூன் றிட்டன்ன கண்ணீர்மை" (நாலடி.44) சுல் -)சுன்) -சுனை = துளைவழியாய் நீர்சுரக்கும் நீர்நிலை. சுல் -சுர் - சுர. சுரத்தல் =துளைவழியாக நீர் ஒழுகுதல். சுர = சுரை = சுரக்கை, பால் சுரக்கும் மடி, கறவை, உட்டுளை, திருகாணிக் குழாய், மூங்கிற்குழாய், நெற்றானபின் உட்டுளை விழும் காய், சுர - சுரப்பு - சுரப்பி - சுரபி = கறவையிற் சிறந்த ஆ. சுர - சுரங்கு - சுரங்கம் = வெடிமருந்திடும் குழி, கீழ்நிலவழி, இரும்பு முதலியன தோண்டியெடுக்கும் கனி. சுர் -சுரு -சுரி. சுரித்தல் = துளையிடுதல். சுரி =துளை (திவ.), ஏட்டுத்துளை. சுரு - (சுருங்கு) - சுருங்கை - நுழைவாயில், நீர்செல்லுங் கரந்து படை, கீழ்நிலவழி. | சுர - ஸ்ரு (இ.வே.), சுருங்கை = ஸூருங்கா (வ.) சுரப்பி -சுரபி ஸூரபி (வ.), சுருங்கை -ஸூருங்கா (வ.), | Surigx என்னும் கிரேக்கச் சொற்குக் குழாய் என்றுதான் பொருள். ஆங்கிலத்தில்தான் அதற்குச் செவிக்குழாய், சுருங்கை முதலிய பொருள்கள் கொள்ளப்பெற்றுள்ளன. ஆதலால், மேற்காட்டிய வடசொற்கள் போன்றே கிரேக்கச் சொல்லும் தமிழ்ச்சொல் திரிபாகும். துளைத்தல் என்னும் வேர்ப் பொருளும் சுல் என்னும் அடிவேரும் ஆரியமொழிகளி லின்மையுங் கவனிக்கத்தக்கதாம். | கன்னல் | கல்லுதல் = தோண்டுதல். கல் - கன் - கன்னம் = சுவரிற் குடையும் துளை. கன் -கனி = நிலத்தில் தோண்டும் சுரங்கம். கன்- கன்னல் = உட்குழி, நீர்க்கலம், நாழிகை வட்டில், நாழிகை, உட் டுளையுள்ள நாணல், நாணல் வகையான கரும்பு. ஒ. நோ: நுள் - நள் - நாளம் - நாணல். | | | |
|
|