அல்பானியம், அர்மீனியம், இத்தைத்தம் (Hittite) என்பன நடுவணாரி யத்தையும்; ஈரானியம் (பாரசீகம்), இந்திய ஆரியம் என்பன கீழையாரித் தையும் சேர்ந்த கிளைகளாகும். |
வேதமொழியும் அதற்குப் பிற்பட்ட சமற்கிருதமும் இந்திய ஆரியமாகும். வடஇந்தியாவிலும் நடுவிந்தியாவிலும் ஒருகாலத்தில் திரவிட மொழிகளாயிருந்தவை, பின்னர் ஆரியகலப்பால் ஆரிய மொழிகளாக மாறியுள்ளன. |
தமிழே திரவிடமாகவும் திரவிடமே ஆரியமாகவும் மாறியிருப்பினும், தமிழ் இந்தியஆரியரால் மறைக்கப் பட்டுள்ளமையாலும் தமிழ்தோன்றிய குமரிநாடு மூழ்கிப் போனமையாலும், மேலையாரியர் உண்மை நிலையறியாது ஆரியத்தை ஒரு தனிமொழியின் வளர்ச்சியாகக் கருதி அதற்கு மூலமென ஒன்றைப் படைத்து, அதற்கு முதல் இந்தோ - ஐரோப் பியம் (Proto - Indo - European) எனப் பெயரிட்டுள்ளனர். |
(11) மேலையாசியாவிலும் வடஆப்பிரிக்காவிலும் பண்டு பேசப் பட்ட அக்காடியம் (அசீரியம், பாபிலோனியம்) அரமேயம், சிரியம், மோவாபியம், பினீசியம், எபிரேயம் என்னும் மொழிகளும், இன்று பேசப் படும் அரபியும், வடகிழக்காப்பிரிக்காவிற் பேசப்படும் எத்தியோப்பிய (அமரிக்கு) மொழியும், சேமியம் (Semitic) என்னும் குடும்பத்தைச் சேர்ந்தனவாகும். |
(12) பண்டை எகிபதியமும் இன்று எத்தியோப்பியாவில் வழங்கும் கோபதியமும் (Coptic), சோமாலி, பெர்பெர் சது (Chad) முதலிய மொழிகளும், ஆமியம் (Hamitic) என்னும் மொழிக் குடும்பமாகும். பண்டை எகிபதிய வழிவந்த கோபதியம் இன்று எத்தியோப்பிய வழிபாட்டு மொழியாக மட்டும் வழங்குகின்றது. |
சேமியத்தையும் ஆமியத்தையும் இணைத்து ஆமிய - சேமியம் (Hamito - Semitic) என ஒரு குடும்பமாகக் கூறுவதுமுண்டு. அரமேயம் இன்று தமசுக்கு (Damascus) நகர்ப்பக்கத்தில் முச்சிறு குமுகங்களாற் பேசப்படுபவதாகப் பாடுமேர் கூறுவர். |
(13) சூடான் நாட்டில் மிகச் சிறிதே அறியப்பட்டுள்ள பல சிறு மொழிக்குடும்பங்கள் உள்ளன. |