(3) வேதமொழியும் சமற்கிருதமும் ஒன்றென்பது. (4) சமற்கிருதம் பண்டை உலகவழக்கு மொழி என்பது. | வேத மொழியே வழக்கற்றும் பிராகிருதங் கலந்தும் போய்விட்டது. அதன்பின் வேதமொழியோடு தமிழைக் கலந்து ஆக்கிய சமற்கிருதம். இலக்கிய நடைமொழியே யன்றி உலக வழக்குமொழியன்று. அதன் நிலைமை படிமையும் பாவையும் போன்றதென அறிக. அது பிறந்ததுமில்லை; இறந்தது மில்லை. | (5) சமற்கிருதம் ஆரியமூலம் என்பது சமற்கிருதம், கிரேக்கம், இலத்தீன் ஆகிய இலக்கியச் செம்மொழி களைச் சிறப்பாகச் சமற்கிருதத்தை, ஆரிய மொழிகட்கு மூலமாகக் கொண்டே, கிரிம் நெறியீடு என்னும் ஆரிய இனமொழி மெய்ம்மாற்ற வாய்பாடு வகுக் கப்பட்டுள்ளது. இது கடைமகனைத் தலைகனாக வைத்து உடன்பிறந்தார் வரிசையைத் தலைகீழாக அமைப்பது போன்றது. | | (எ-டு.) ஆரிய மூச்சொலி முழங்கு நிறுத்தங்கள் முழங்கு நிறுத்தங்களாகத் திரிந்தன என்பது. | சமற்கிருதம் | கிரேக்கம் | இலத்தீன் | கோதியம் | செருமானியம் | ஆங்கிலம் | bhar bhu dvara | phero huo thura | fero fu-i fores | baira ---- daur | biru bi-n tor | bear be door | (=dhvra) இங்குக் காட்டப்பட்டுள்ள முச்சொற்கட்கும் மூலம், முறையே பொறு, பூ, துள்-துளை என்னும் தமிழ்ச்சொற்களாகும். பொறுத்தல்= சுமத்தல். "சிவிகை பொறுத்தானோ டூர்ந்தானிடை" (குறள். 37) பூத்தல்=தோன்றுதல், இருத்தல். "பூத்தலிற் பூவாமை நன்று". (நீதிநெறி, 6). துளை = வாசல். | மாக்கசு முல்லர் bear, burden, bier, barrow, birth, bairn, barley, barn என்று ஆங்கிலத்திலும்; நெச என்று செலத்தியத்திலும் சிலா வோனியத்திலும்; bar என்று செந்திலும்; உள்ள சொற்களெல்லாம் bar என்னும் வேரினின்று பிறந்த பொறுத்தற் கருத்துச் சொற்களென்று, மொழிநூல் பற்றிய முச் சொற்பொழிவுகள் (Three Lectures on the Science of Language ) என்னும் நூலிற் கூறியுள்ளார். (பக்.20-34). | | |
|
|