ஆரிய முழங்கா நிறுத்தங்கள் உரசிகளாகத் திரிந்தன என்பது. எ- டு;- சமற்கிருதம் இலத்தீன் கிரேக்கம் கோதியம் ஆங்கிலம் செருமானியம் padam pedem poda fotus foot fuss இது பதம்-பாதம் என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபாம்.நிலத்திற் பதிவது பாதம். பதி-பதம்-பாதம். அடி (bottom part) வேறு; பாதம் வேறு. பாதம் வைத்த தண்டு என்னும் வழக்கை நோக்குக. இங்குக் காட்டியவற்றால், சமற்கிருதம் ஆரிய மூலமன்மை அறிக. (6). சமற்கிருதத்தின் வழியது பிராகிருதம் என்பது. பிராகிருதம்=முந்திச் செய்யப் பெற்றது. ஸ்ம்ஸ்கிருதம் = வேதமொழி யொடு பிராகிருதம் கலந்து செய்யப்பெற்றது. |