| முற்காலச்சொல் | பிற்காலச்சொல் | | தெய்வப்பெயர் : சொக்கன், பெருவுடையான், முருகன், திருமால், திருமகள், நாமகள். | சுந்தரன், பிருகதீஸ்வரன் , சுப்ரமணியன், விஷ்ணு, லக்ஷ்மி, சரஸ்வதி. | | இடப்பெயர் : தகடூர், முது குன்றம், மறைக்காடு, மயிலாடுதுறை | தர்மபுரி, விருத்தாசலம், வேதாரண்யம், மாயூரம். | | பல்வகைப்பெயர் : அரசுகட்டில், அரியணை, ஆட்டை வாரியம், திருவோலை, கள்ளக் கையெழுத்து, கல்வெட்டு. | சிங்காசனம் (சிம்மாசனம்), சம்வத்ஸர (வாரியம்), நியோகம், கூடலேகை , சிலாசாஸனம். | (தடித்த எழுத்துள்ள வடசொற்கள் அவற்றுக்கு நேரான தென்சொற்களின் மொழிபெயர்ப்பாகும்.) இனி, சில தென்சொற்கள் தம் தென்மொழி வடிவிழந்து வடமொழி வடிவில் வழங்கத் தலைப்பட்டன. எடுத்துக்காட்டு: | தென்மொழிவடிவம் | வடமொழி வடிவம் | | அரசன் | ராஜன் | | அவை | சபை | | திரு | ஸ்ரீ | | படி | பிரதி | மக்களைத் தாக்கிய குலப்பிரிவினை நாளடைவில் இலக் கியத்தையும் தாக்கிற்று. வெண்பா அந்தணர்பா என்றும், ஆசிரி யப்பா அரசர்பா என்றும், கலிப்பா வணிகர்பா என்றும், வஞ்சிப்பா வேளாளர்பா என்றும், வகுக்கப்பட்டதுடன், கலம்பகச் செய்யுள் கள் தேவர்க்கு நூறும், அந்தணர்க்குத் தொண்ணூற்றைந்தும் அரசர்க்குத் தொண்ணூறும், அமைச்சர்க்கு எழுபதும், வணிகர்க்கு ஐம்பதும், வேளாளர்க்கும் முப்பதும் பாடப்படும் எனவும் இலக்கணம் விதிக்கப்பட்டது. பாணரைத் தீண்டாமை தாக்கிய தால், இசைத்தமிழும் நாடகத் தமிழும் 12ஆம் நூற்றாண்டிற்குமேல் வழக்கொழிந்தன. அவற்றிற்குரிய நூல்களும் இறந்துபட்டன. தமிழ் கற்பார்க்குப் போதிய அரசியல் ஊக்குவிப்பின்மையால், முதலிரு சங்ககாலத்தும் முத்தமிழாயிருந்த இலக்கணநூல், கடைச் சங்க காலத்தில் ஒரு தமிழாயும், 11ஆம் நூற்றாண்டிற்குமேல் அதுவும் நிறைவின்றி எழுத்துச் சொல்லளவாயும் குறுகிவிட்டது. |