தமிழ் வடமொழி கிளையெனக் கருதப்பட்டு, 11ஆம் நூற்றாண்டில் வடமொழி யிலக்கணந் தழுவி வீரசோழியம் என்னும் தமிழிலக்கண நூலும் இயற்றப்பட்டது. கடைச்சங்க காலத்திலிருந்து ஆரியக் கருத்துகளும் தமிழி லக்கியத்திற் புகுத்தப்பட்டதினால், தமிழ் வரலாற்றிலும் தமிழ் நாட்டு வரலாற்றிலும் புராணக் கருத்துகள் புகுந்தன. பிற்காலத்து நூல்களெல்லாம் பெரும்பாலும் கலைத்துறை பற்றாது மதத் துறையே பற்றின. 14ஆம் நூற்றாண்டில் பாடப்பட்ட வில்லிபாரதத்தில் வட சொற்கள் வரைதுறையின்றி ஆளப்பட்டன. தமிழ்ப்புலவரையுங் கலைஞரையும் போற்றுவாரின்மையால், நூற்றுக்கணக்கான தமிழ்நூல்கள் இறந்துபட்டன. தூயதமிழ் தாழ்த்தப்பட்டோர் மொழி எனத் தாழ்த்தப்பட்டதினால் நூற்றுக் கணக்கான தென்சொற்களும் மறைந்தொழிந்தன. |