( Absolute Monarchy ). நிலைத்த ஆட்சி( Stable Government ) பொறுப் பாட்சி( Responsible Government ) என்னுந் தன்மைகள் செங்கோலாட்சிக் கிருந்தன. சிற்றரசர் நாடுகட்கெல்லாம் தன்னாட்சி ( Autonomy ) வழங்கப் பட்டிருந்தது. இற்றை அரசியல் நூல்( Politics ) வகுக்கும் சீமைப் பாகுபாட் டின்படி, தமிழ்ச் சீமைகளின் வகைமையைக் கூறின், நெகிழும் சட்டமுறைமையும்( Flexible Constitution ) தேர்தல் பெறாக் கருமச் சுற்றமும்( Non-elective Executive ), சட்ட நீதியும்( Rule of Law ), கொண்ட தாராளத்( Liberal ) தனிச் சீமை( Unitary State ) என்னலாம். பிற்காலத்தில் ஆரியக் குலப்பிரிவினையால் ஏற்பட்ட குலவாரி நீதியை, ஆள்வினை நீதி( Administrative Law ) என்னலாம். |