பக்கம் எண் :

பழந்தமிழாட்சி49

(7) கல்லிடு கூடை - இடங்கணிப் பொறிக்குக் கல்லிட்டு வைக்குங் கூடை.

(8) தூண்டில் - அகழியைக் கடந்து மதிலைப் பற்றுவாரை மாட்டியிழுக்குந் தூண்டில் வடிவான பொறி.

(9) தொடக்கு - கழுத்திற் பூட்டி முறுக்குஞ் சங்கிலி.

(10) ஆண்டலையடுப்பு - பறந்து உச்சியைக் கொத்தி மூளையைக் கடிக்கும் ஆண்டலைப்புள் வடிவமான பொறிவரிசை.

(11) கவை-அகழியினின்றேறின் அதற்குள் விழத் தள்ளும் இருப்புக்கவை.

(12) கழு - கழுக்கோல்.

(13) புதை - அம்புக்கட்டு.

(14) புழை - ஏவறைகள்.

(15) ஐயவித்துலாம் - அம்புத்திரள் தொங்கவிட்ட விட்டம்.

(16) கைபெயரூசி - மதிற்றலையைப் பற்றுவாரின் கையைப் பொதுக்கும் ஊசிப்பொறிகள்.

(17) சென்றெறி சிரல் - பகைவர்மேற் சென்று அவர் கண்ணைக் கொத்தும் சிச்சிலிக்குருவி வடிவான பொறி.

(18) பன்றி - மதிற்றலையிலேறினாருடலைக் கொம்பாற் கிழிக்கும் இருப்புப்பன்றி.

(19) பணை -அடிக்கும் மூங்கில்தடி வடிவமான பொறி.

(20) எழுவுஞ்சீப்பு - கதவுக்கு வலியாக உள்வாயிற் படியில் நிலத்தில் கீழே விடும் மரங்கள்.

(21) கணையம் - கோட்டை மதிற் கதவுக்குத் தடையாகக் குறுக்கேயிடும் உத்தரம்.

(22) கோல் - விட்டேறு.

(23) குந்தம் - சிறு சவளம்.

(24) வேல்.

(25) ஞாயில் - குருவித் தலை என்னும் மதிலுறுப்புகள்.

(26) நூற்றுவரைக் கொல்லி.

(27) தள்ளிவெட்டி.

(28) களிற்றுப்பொறி.

(29) விழுங்கும் பாம்பு.

(30) கழுகுபொறி.

(31) புலிப்பொறி.