மண்டலம் - மண்டிலம் = 1. வட்டம். 2. வட்டக் கண்ணாடி. 3. வட்டமான சுடர்.(ஞாயிறு, திங்கள்) 4. நிலப் பகுதி. "மண்டிலத் தருமையும்" (தொல்.அகத்.41) 5. அளவொத்த அடிகளைக் கொண்ட செய்யுள். அ - இ. அலம்-இலம். ஒ.நோ. அனம் - இனம். எ.டு: பட்டனம் - பட்டினம். மண் - மணி = 1. வட்டமானது, நாழிகைத் தொகையை அடித்துக் காட்டும் வட்டமான வெண்கலத்தட்டு, நாழிகை, இரண்டரை நாழிகை நேரம். 2. உருண்டையானது, உருண்டையான பாசி அல்லது முத்து அல்லது ஒளிக்கல் வகை, உருண்டையான விதை அல்லது அரிசி. எ-டு. சங்குமணி, மணிமாலை, தொண்மணி (நவரத்தினம்), கூலமணி, சிறுமணி (அரிசி). முட்டு - முட்டான் - திருநீறு நீற்றுவதற்குரிய சாணவுருண்டை. முட்டு - முத்து = உருண்டையான மணிவகை அல்லது விதை, முத்துப் போன்ற கொப்புளம். "வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும்" (தொல். பொதுப் பாயிரம்) முத்து - முத்தம் = பெருமுத்து. முத்தம் - முக்த(வ.). இந்திய ஆரியர் பிற்காலத்தில் தமிழரொடு தொடர்பு கொண்ட பின்னரே, சமற்கிருதம் என்னும் அரைச் செயற்கையான இலக்கிய நடை வழக்கை அல்லது பொத்தக மொழியை அமைத்து, அதிற் பண்டைத் தமிழ் நூல்களையெல்லாம் மொழிபெயர்த்துக் கொண்டனர். இது என் வடமொழி வரலாறு என்னும் நூலில் விரிவாக விளக்கப்பெறும். தமிழர் தென்னாட்டுப் பழங்குடி மக்கள். தமிழ் தோன்றியது முழுகிப்போன குமரிக்கண்டத்தில் 50,000 ஆண்டுகட்குமுன். தமிழ் நாகரிகம் தோன்றியது 20,000 ஆண்டுகட்குமுன். தமிழிலக்கண விலக்கியம் தோன்றியது கி.மு.10,000 ஆண்டுகட்குமுன். இதன் விளக்கத்தை என் தமிழ் வரலாறு என்னும் நூலுட் காண்க. இந்திய நாகரிக அடிப்படை தமிழ் நாகரிகமே. ஆயினும், இன்று அது அறியப்படாமலிருப்பதற்குக் கரணியம் (காரணம்): |