பக்கம் எண் :

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்9

சுருதி :   செவியுறுதல் = கேட்டல்
      செவியுறு - ச்ரு - ச்ருதி = கேள்வி.
      முதற்காலத்தில் எழுதப்பெறாது கேட்டேயறியப் பட்டு வந்த ஆரிய       மறை.

மண்டலம் : முல் - முன் - முனி = வில்.

முல் - முர் - முரி. முரிதல் = வளைதல்.
முரி - மூரி = வளைவு.
முர் - முரு - முருகு = வளைந்த காதணி.
முர் - முறு - முறுகு. முறுகுதல் = வளைதல்; திருகுதல்.
முறுகு - முறுக்கு = திருகல், திருகிய தின்பண்டம்.
முறுக்கு - முறுக்கம்.
முறு - முற்று - முற்றுகை = நகரைச் சூழ்கை.
முறு - முறை - மிறை = வளைவு.
முறு - முறி. முறிதல் = வளைதல்,
முறி - மறி. மறிதல் = வளைதல், மடங்குதல்.

முல் - (முள்) - முண்டு = உருட்சி, திரட்சி.
முண்டு - முண்டை = உருண்டை, முட்டை.

"முண்டை விளைபழம்" (பதிற். 60:6)

முள் - முட்டு - முட்டை
முள் - (முண்) - முணம் - முணங்கு. முணங்குதல் = உள் வளைதல்.
முணம் - முடம் = வளைவு.
முடம் - முடங்கு. முடங்குதல் = வளைதல்.
முடங்கு - மடங்கு. முடங்கு - முடக்கு = மடக்கு.
முடம் - (முடல்) - முடலை = குறடு, உருண்டை.
முண்டு - மண்டு. மண்டுதல் = வளைதல்.
மண்டு - மண்டி, மண்டியிடல் = முழங்காலை மடக்குதல்.

மண்டு - மண்டலம், வட்டம். நாட்டுப்பகுதி, காலப்பகுதி, நூற்பகுதி.

   கொங்கு மண்டலம், தொண்டை மண்டலம் என்னும் வழக்குகளை நோக்குக.

   மண்டலம் - மண்டலி, மண்டலித்தல் = செய்யுளின் எல்லா அடிகளும் அளவொத்து வருதல். ஈறு தொடங்கியில் (அந்தாதியில்) முதலும் ஈறும் ஒன்றித்து வருதல்.