பக்கம் எண் :

42பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

இறை = 1. வீட்டிறப்பு,
"குறியிறைக் குரம்பை" (புறம்.129)
2. பெண்டிரின் வளைந்த முன்கை.
"எல்வளை யிறையூ ரும்மே" (கலித்.7:16)
இறைதல் = வளைதல், வணங்குதல்.
"இணையடி யிறைமின்" (பதினோ. ஆளு. திருக்கலம். 48)
இறை - இறைஞ்சு. இறைஞ்சுதல் = வணங்குதல்.
இற - இறா = வளைந்த பெருங்கூனி. சின்னக்கூனி = (மீன்)......
இறா - இறால் = 1. வட்டமான தேன்கூடு. 2.பெருங்கூனி.
இற - இறவு = 1. பெருங்கூனி.
"கடலிறவின் சூடுதின்றும்" (பட்டினப். 63)

2. தேன்கூடு (ஞானவா.)

இறா -இறாட்டு = 1. பெருங்கூனி. 2. தேன்கூடு.

3. நூற்கும் சக்கரம்.

இறாட்டு - இறாட்டை = நூற்கும் சக்கரம்.
இறாட்டு - இறாட்டினம் = 1. நூற்கும் சக்கரம்.


   2. நீரிறைக்கும் உருளை. 3. ஏறி விளையாடும் குடை யிறாட்டினம் அல்லது இறாட்டின வூஞ்சல்.

   நூற்கும் சக்கரம் கையினாற் சுற்றப்படுவதனால்,அது கையிறாட்டு அல்லது கையிறாட்டை, அல்லது கையிறாட்டினம் என்று சொல்லப்படும். இறாட்டு என்னும் சொல்லே, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலியில் இல்லை. இராட்டு என்னும் வழூஉச் சொல் மட்டும், தேன்கூடு என்னும் பொருளிற் குறிக்கப்பட்டுள்ளது.

   இறாட்டு, இறாட்டை, இறாட்டினம் என்னும் மூவடிவும், இந்தியில் ரஹட் அல்லது ரஹண்ட்டா என்னும் வடிவில் நூற்குங் கருவியைக் குறித்து வழங்குகின்றன. ஆயின், இந்திச்சொல்லே தமிழ்ச் சொற்கு மூலமாகச் சென்னை அகரமுதலியிற் குறிக்கப்பட்டுள்ளது.

   நூல் என்னுஞ் சொல்லே நுண்ணியது என்னும் வேர்ப்பொரு ளுடையது. "நுணங்குநுண் பனுவல்" என்பது மிக நுண்ணிய நூலைக் குறிக்கும்.

   அக்காலத்தில் பட்டு, பருத்திப் பஞ்சு, விலங்கு மயிர்ஆகிய மூவகைக் கருவியாலும் ஆடை நெய்துவந்தனர். இது,