பக்கம் எண் :

54பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

போன்ற வண்டி; பாண்டில் ஈருருளியுள்ள குதிரைவண்டி; வங்கம் பள்ளியோட வண்டி. அது பள்ளியோடம் போன்றது. தேர் இக் காலத் தேர்போற் சிறியது.

   விலங்கு: காளை, குதிரை, கோவேறு கழுதை, யானை, ஒட்டகம் என்பன.

   நீரூர்திகள்: புணை, பரிசல், கட்டுமரம், ஓடம், அம்பி, திமில், பஃறி, தோணி, படகு, நீர்மாடம் (பள்ளியோடம்), நாவாய் (கப்பல்) என்பன. நாவாய், வங்கம், கப்பல் என்பன சிறிது வேறுபட்டவையாயு மிருக்கலாம்.

   தமிழ்நாட்டிலும் வடநாடுகளிலுமுள்ள பேரூர்கட்கும் கோ நகர்கட்கும், தடிவழி என்னும் பெருஞ்சாலைகள் சென்றன. இச் சாலைகள் காடுகளிற் கூடும் கவர்த்த இடங்களில், அவ்வந் நாட்டு வேந்தனின் விற்படைகள், வணிகச் சாத்துகட்கு வழிப்பறிக்கும் கள்வராலும் கொள்ளைக்காரராலும் பொருட்சேதமும் ஆட்சேத மும் நேராவாறு இரவும் பகலும் காத்து நின்றன.

"உடம்பிடித் தடக்கை யோடா வம்பலர்
.............................................................
அணர்ச்செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கும்
உல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்
வில்லுடை வைப்பின் வியன்காட் டியவின்"
(பெரும்பாண். 76-82)

என்று கடியலூர் உருத்திரங் கண்ணனார் தொண்டைநாட்டைப் பற்றிக் கூறுதல் காண்க.

  நாடு கைப்பற்றற்கும் வாணிகத்திற்கும், அயல்நாடு பார்த்தற் கும், அரசரும் வணிகரும் பொதுமக்களும் செல்லக் கூடிய நாவாய் என்னும் பெருங்கலங்கள், கீழ்கடலிலும் மேல்கடலிலும் அடிக்கடி சென்றுகொண்டிருந்தன.

"வானியைந்த இருமுந்நீர்ப்
பேஎநிலைஇய இரும்பவ்வத்துக்
கொடும்புணரி விலங்குபோழக்
கடுங்காலொடு கரைசேர
நெடுங்கொடிமிசை யிதையெடுத்
தின்னிசை முரசமுழங்கப்
பொன்மலிந்த விழுப்பண்டம்
நாடார நன்கிழிதரும்
ஆடியற் பெருநாவாய்
மழைமுற்றிய மலைபுரையத்
துறைமுற்றிய துளங்கிருக்கைத்